மேலும் அறிய
மதுரையில் திறக்கப்பட்டது சர்வதேச ஹாக்கி மைதானம்.. துணை முதலமைச்சர் உற்சாகம் !
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மதுரை விளையாட்டு மைதான வளாகத்தில் 20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
துணை முதலமைச்சர்
1/8

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் 14 வது ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
2/8

நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா, ஜப்பான், கனடா, ரஷ்யா உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்கின்றன.
3/8

இம்மைதானத்தில் 1500 பேர் அமரும் வகையில் தற்காலிக கேலரி, 500 பேர் அமரும் வகையில் நிரந்தர கேலரி என மொத்தம் 2000 பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
4/8

விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வு அறை, ஜிம், அவசர மருத்தவ மையம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
5/8

சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம், மதுரை சர்வதேச ஹாக்கி மைதானத்தில் மொத்தம் 72 சர்வதேச போட்டிகள் நடைபெறுகிறது.
6/8

உலக கோப்பை 14-வது ஜூனியர் ஹாக்கி போட்டிகள் சென்னை மற்றும் மதுரையில் வரும் நவம்பர் 28-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 10-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
7/8

மதுரையில் நவம்பர் 28 ல் உலகக் கோப்பைக்கான முதல் போட்டி ஜெர்மனி - ரஷ்யா இடையே கோலாகலமாக தொடங்கவுள்ளது.
8/8

image 10
Published at : 22 Nov 2025 11:32 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















