மேலும் அறிய
Meal Maker Recipe : சாதம், சப்பாத்தி, தோசை எல்லாத்துக்கும் இந்த ஒரு சைட் டிஸ் இருந்தா போதும்..இந்த அசத்தலான மீல் மேக்கர் கறியை ட்ரை செய்து பாருங்கள்!
Meal Maker Recipe : அசைவ உணவு அனைத்து நாட்களிலும் எடுத்துக்கொள்ள முடியாமல் இருக்கும். அந்த நாட்களில் இந்த மீல் மேக்கர் ரெசிபி செய்து சாப்பிடுவது, அசைவ உணவு ருசிக்கே டஃப் கொடுக்கும் தெரியுமா?

மீல் மேக்கர் கறி
1/6

அனைத்து நாட்களிலும் அசைவ உணவு எடுத்துக்கொள்ள முடியாது. அதுவும் இந்த கொரோனா ஊரடங்கு நேரங்களில் அசைவ உணவு அனைத்து நாட்களிலும் எடுத்துக்கொள்ள முடியாமல் இருக்கும். அந்த நாட்களில் இந்த மீல் மேக்கர் ரெசிபி செய்து சாப்பிடுவது, அசைவ உணவு ருசிக்கே டஃப் கொடுக்கும் தெரியுமா?
2/6

தேவையான பொருள்கள்: சோயா துண்டுகள் - 1 1/4 கப், வெங்காயம்: 2 ( சிறியதாக நறுக்கியது ), கருவேப்பிலை & கொத்தமல்லி -சிறிதளவு, கடுகு - 1/2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் ., மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா - 1 டீஸ்பூன், கொத்தமல்லி தூள் - 1/2 டீஸ்பூன், எண்ணெய்- 1 1/2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - தேவையான அளவு, கிரேவி செய்ய: தக்காளி - 2, தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்.
3/6

செய்முறை 3 கப் தண்ணீர் கொதிக்க வைத்துக்கொண்டு,அதில் சோயா போட்டு வைக்கவும். சோயா மென்மையாக வரும் வரை தண்ணீரில் வைத்து இருக்க வேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் சோயாவை நன்றாக கழுவி கொள்ளவும். சோயா பெரியதாக இருந்தால் அதை இரண்டாக வெட்டி கொள்ளவும்.
4/6

தேங்காய் துருவல் மற்றும் தக்காளி இரண்டையும் நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில்,கடுகு , சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளவும். அதில் கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளவும் நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்த்து , பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.
5/6

பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் மணம் மாறும் வரை வதக்கி கொள்ளவும். இதில் அரைத்து வைத்த தக்காளி மற்றும் தேங்காய் பேஸ்ட் இதனுடன் சேர்க்கவும். மிளகாய் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி தூள் மூன்றையும் சேர்த்து 3 நிமிடங்கள் நன்றாக வைக்கவும்.
6/6

இதில் சோயாவை சேர்த்து நன்றாக வேக வைக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கிரேவி சரியான பதம் வரும் வரை வேக வைக்கவும். பின்னர் அதில் கொத்தமல்லி இலைகளை தூவி சூடாக பரிமாறலாம்.
Published at : 22 Aug 2023 06:01 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion