மேலும் அறிய
International Yoga Day 2024:தொப்பையை குறைக்க வேண்டுமா? செய்ய வேண்டிய யோகா லிஸ்ட் இதோ!
International Yoga Day 2024: தொப்பை குறைய தினமும் எளிதான யோகா பயிற்சிகளை செய்வது உதவும். அதன் தொகுப்பை இங்கே காணலாம்.
சர்வதேச யோகா தினம்
1/5

உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் எடையை சீராக நிர்வகிக்கலாம். வயிற்றுப் பகுதியில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை குறைக்க சில யோகா போஸ்கள் உதவும். அதில் ஒன்று Boat Pose. இது நவாசனம் என்றழைக்கப்படுகிறது. முதலில் யோகா விரிப்பில் படுக்கவும். சற்று எழுந்து படகு போன்று வளையும்படி அமரவும். இப்போது இரு கைகளையும் கால் முட்டிக்கு அருகில் வைகக்வும்.இப்பொழுது மூச்சை இழுத்துக் கொண்டே காலையும் கையையும் உயர்த்தவும். கைகளை முதலில் கால் பெருவிரல் நோக்கி கொண்டு வரவும்.பின் இரு கைகளையும் இரு கால்களுக்கு அடியில் கும்பிட்ட நிலையில் படத்திலுள்ளது போல் சேர்க்கவும். இந்நிலையில் பத்து விநாடிகள் இருக்கவும். * பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும். * மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டே கைகளை கால் நோக்கி உயர்த்த வேண்டும். அந்நிலையில் மூச்சை அடக்கியிருக்க வேண்டும். பின் மூச்சை வெளியில் விட்டு சாதாரண நிலைக்கு வர வேண்டும்
2/5

மலை போன்ற நிலை. இது தடாசனம் என்று அழைக்கப்படுகிறது. தோள்பட்டையில் காயமோ, நாள்பட்ட வலியோ இருந்தால் இதைச் செய்வதைத் தவிர்க்கவும். தலைவலி, தலைசுற்றல், தூக்கமின்மை, குறைந்த ரத்த அழுத்தம் முதலிய உடல் உபாதைகள் இருப்பவர்கள் இதைச் செய்வதைத் தவிர்க்கவும்.
3/5

பூனைப் போல நிற்கும் ஆசனம். இது தொப்பையைக் குறைக்க உதவும்.
4/5

உஸ்த்ராசனம். ஒட்டகம் போன்ற நிலையில் இருக்கும் யோகா இது. தொப்பையை குறைக்க இதை செய்யலாம்.
5/5

சூரிய நமஸ்க்ராம்- இது உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவும். அதோடு, தொப்பையை குறைக்க உதவும். யோகாவை மருத்துவர் அல்லது சான்றிதழ் பெற்ற யோகா பயிற்றுநர் உதவியுடன் செய்ய வேண்டும். மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.
Published at : 20 Jun 2024 07:06 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















