மேலும் அறிய
குளிர், மழை காலத்தில் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? சில டிப்ஸ்!
Gut Health: ம்ழை, குளிர் காலத்தில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வழிமுறைகள் பற்றி காணலாம்.

உணவு
1/5

குடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை கண்டறிய உங்களது செரிமான மண்டலம் சீராக செயல்படுவதை வைத்து கண்டறியலாம். குடலில் நல்ல பாக்டீரியாக்கள் செழித்து வளர்ந்தால் ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவது துரிதமாகும். குடல் ஆரோக்கியத்திற்கும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி, மனநலம் ஆகியவற்றிற்கு நேரடி தொடர்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. இது செரிமானத்தை ஆதரிக்கிறது. இருப்பினும், தீவிர உடற்பயிற்சி சில சமயங்களில் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். எனவே மிதமான உடற்பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்கவும்.
2/5

பதப்படுத்தப்பட்ட உணவுகள் குடல் பாக்டீரியாவின் சமநிலையை சீர்குலைத்து செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். குறிப்பாக பருவகால மாற்றங்களின் போது உடல் அதிக செக்சிடிவாக இருக்கும். அதிக சர்க்கரை, எண்ணெயில் பொரித்த உணவுகள், பாக்கெடுகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளை தவிர்க்கவும்.மனம் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மன அழுத்தம் நிர்வாகம் முக்கியம். ஏனெனில், இது குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். யோகா, தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சி போன்ற பயிற்சிகளை செய்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவலாம்.
3/5

குடல் ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் இது செரிமான அமைப்பை சரிசெய்து மீட்டமைக்க உதவும். குளிர்காலம் தூக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். இது குடல் செயல்பாட்டை பாதிக்கிறது. ஒட்டுமொத்த செரிமானத்தை ஆதரிக்கவும் ஆரோக்கியமான குடல் சூழலை பராமரிக்கவும் ஒவ்வொரு நாளும் இரவில் 7-9 மணிநேரம் தூங்க வேண்டும்.
4/5

ப்ரீபயாடிக் உணவுகள் ’ non-digestible' நார்ச்சத்து நிறைந்தது. இது குடல் பாக்டீரியாக்களுக்கு நன்மை பயக்கும். வெங்காய், பூண்டு, வாழைப்பழம் ஆகியவை ப்ரீபயாடிக் உணவுகள். இது குடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்
5/5

நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்திற்கு அவசியம், ஏனெனில் இது நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. புரோபயாடிக் உணவுகள் குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை அதிகரிக்கும். புரோபயாடிக் உணவுகள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தயிர், பழை சோறு உள்ளிட்ட புரோபயாடிக் உணவுகளை சாப்பிடலாம்.
Published at : 26 Nov 2024 04:16 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement