Annamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPS
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவை இரண்டாக உடைத்து அக்கட்சியை பலவீனமாக்க வேண்டும் என பாஜக தலைமை அண்ணாமலைக்கு ஆர்டர் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுகவும், மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவும் இருக்கிறது. இந்த ரேசில் பாஜக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சிகளும் உள்ளன.இதனிடையே, கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து களம் இறங்கிய அதிமுக, பாஜக இடையில் ஏற்பட்ட சலசலப்பால் கூட்டணியை முறித்தது. இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் இந்த கூட்டணியை மீண்டும் உருவாக்க பாஜக திட்டம் தீட்டி வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அசைந்து கொடுப்பதாக தெரிவியவில்லை.
இந்த சூழலில், எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது முன்னாள் சீனியர் அமைச்சர்கள் ஆறு பேர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது, அண்மையில் கூட இவர்கள் எல்லோரும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுவில் இருந்து பிரிந்து சென்றவர்களான ஓபிஎஸ், வைத்திலிங்கம் ஆகியோர் நம்முடன் இணைய வேண்டும். இது நடந்தால் தான் நாம் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர முடியும்,,எனவே 2026 சட்டமன்ற தேர்லுக்கு முன் இதை நீங்கள் செய்ய வேண்டும் என்று எடப்படியிடம் கோரிக்கை வைத்தாக தகவல் வெளியானது.
இதனிடையே நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணியை அவருடையே வீட்டிற்கே சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு நயினார் நகேந்திரன் அதிமுகவில் இணைவதற்கான சந்திப்பு என்று பலர் கூறிய நிலையில், எடப்பாடி மீது கடும் அதிருப்தியில் இருக்கும் வேலுமணியை பாஜகாவில் இணைப்பதற்கான தூதுவனாகத்தான் நயினார் நாகேந்திரன் சென்றார் என்று சிலர் கூறினர்.
இந்த சூழலில் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பை முடித்துவிட்டு நேற்று முன் தினம் சென்னை திரும்பினார். இந்த நிலையில் அண்ணாமலைக்கு ஒரு அசைமெண்டை டெல்லி பாஜக கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஜனவரி மாதம் நடைபயணம் மேற்கொள்ள உள்ள அண்ணாமலை, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் அதிமுகவை பாஜக கூட்டணியில் இணைக்க வேண்டும் அல்லது எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட மாஜி அமைச்சர்களை தங்கள் பக்கம் இணைத்து அதிமுகவை இரண்டாக உடைத்து எடப்பாடி பழனிச்சாமியை தனிமை படுத்த வேண்டும் என்ற அசைமெண்டை டெல்லி பாஜக அண்ணாமலைக்கு கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.