மேலும் அறிய

''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி

மழை பாதிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனநிலையை ஆற்றுப்படுத்த வேண்டும் என்று நினைக்காமல் தேர்வை நடத்துவதா? இது நியாயமா?

3,  6 மற்றும்‌ 9 ஆம்‌ வகுப்பு அரசு, அரசு உதவி பெறும்‌ பள்ளி‌ மாணவர்களுக்கு PARAKH தேசிய அடைவு ஆய்வு (என்ஏஎஸ்) தேர்வு நாளை நடைபெறும் நிலையில், ஃபெஞ்சல் புயலால் 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நாளையும் (டிச.4) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் பலியாகினர். இந்த நிலையில் தேர்வு உடனே நடத்தப்படுவது அவசியமா என்று கேள்வி எழுந்துள்ளது. 

என்ன தேர்வு? எதற்கு?

2024 -25 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில் பயிலும்‌ 3, 6 மற்றும்‌ 9 ஆம்‌ வகுப்பு மாணக்கர்களுக்கு தேர்வு நடைபெற உள்ள நிலையில் அதற்கு மாவட்ட அளவில்‌ சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில்‌ உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ 3, 6 மற்றும்‌ 9 வகுப்பு மாணவர்களுக்கு, PARAKH தேசிய அடைவு ஆய்வு (என்ஏஎஸ்) தேர்வு 04.12.2024 அன்று நடைபெற உள்ளது. ‌ இந்தத் தேர்வினை மாவட்ட அளவில்‌ கண்காணிக்க  33 மாநில அளவிலான அலுவலர்களை சிறப்பு பார்வையாளர்களாக நியமனம்‌ செய்ய அரசின்‌ அனுமதி வேண்டி, எஸ்சிஇஆர்டி எனப்படும் மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவன இயக்குநர்‌ பரிந்துரை செய்துள்ளார்‌.

38 மாவட்டங்களிலும் சிறப்புப் பார்வையாளர்கள் நியமனம்

இதன்படி 33 மாநில அலுவலர்கள் 38 மாவட்டங்களிலும் சிறப்புப் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பனுக்கு செங்கல்பட்டு மாவட்டம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவன இயக்குநர்‌ உமாவுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தனியார்‌ பள்ளிகள்‌ இயக்குநர் பழனிச்சாமிக்கு சென்னை மாவட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்கக இயக்குநர் லதாவுக்கு கடலூர்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆசிரியர்‌ தேர்வு வாரிய உறுப்பினர் உஷாராணிக்கு ராணிப்பேட்‌டை மாவட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பள்ளி மாணவர்களால் எப்படி பங்கேற்க முடியும்?

இந்த நிலையில், ’’கன மழையால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களிலும் தேர்வு நடத்துவது சரியா? அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களால் எப்படி பங்கேற்க முடியும்?’’ என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் ’’மழை பாதிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனநிலையை ஆற்றுப்படுத்த வேண்டும் என்று நினைக்காமல் தேர்வை நடத்துவதா? இது நியாயமா?’’ என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget