மேலும் அறிய
Curd: வீட்டிலேயே கெட்டித்தயிர் தயாரிக்க சில டிப்ஸ் இதோ!
Curd: வீட்டிலேயே சுத்தமான கெட்டியான தயிரை தயாரிக்க சில டிப்ஸ் இதோ உங்களுக்கு.

தயிர்
1/5

தயிர்(Curd) ஒரு மிகச்சிறந்த சத்தான உணவாகக் கருதப்படுகிறது, மேலும் நல்ல பாக்டீரியாக்களால் நிரம்பியுள்ளது. அதுமட்டுமின்றி அது நல்ல தரமான புரத உணவாக கருதப்படுகிறது. இதில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி 2 மற்றும் பி 12 ஆகியவை உள்ளது.
2/5

10 முதல் 15 நிமிடங்கள் வரை பாலை மிதமான சூட்டில் வைத்துக் காய்ச்சவும். அவ்வாறு காய்ச்சினால் தான் தயிர் நன்றாக கெட்டியாக வரும்.. பாலை அடுப்பில் இருந்து இறக்கிவைத்து அதை நன்றாக குளிர வைக்கவும்.
3/5

துவெதுப்பான சூட்டில் பால் இருக்க வேண்டும். பின்னர் அந்தப் பாலை இன்னொரு அகலமான பாத்திரத்தையும் கொண்டு நுரை பொங்க ஆத்திக் கொள்ளுங்கள். இவ்வாறாக 4 முதல் 5 முறை நுரை பொங்க ஆத்திக் கொண்டால் போதும்.
4/5

நுரை பொங்க ஆத்துவதால் என்ன பயன் என்று கேட்டால். அதனால்தான் தயிர் நன்றாக கெட்டியாக உறையும். நுரை பொங்கிய பாலில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கி விடுங்கள்.
5/5

இதை ஒரு கன்டெய்னரில் ஊற்றி உறையவிடவும். தயிர் உறை ஊற்றிய பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். அதைவிட முக்கியம் அதை அங்குமிங்கும் ஆட்டிவிடக் கூடாது. இரவில் உறைய வைத்து காலையில் எடுத்தால் தயிர் பதமாக இருக்கும்.
Published at : 25 Oct 2024 05:06 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement