மேலும் அறிய

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ

Savukku Shankar: அவதூறு வழக்கில் யூடியூப்பர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்ய சென்ற நிலையில், வீட்டின் கதவை திறக்க மறுத்ததால் கடப்பாரை கொண்டு கதவை உடைக்க போலீசார் முயற்சித்து வருகிறார்கள்.

சர்ச்சை கருத்தும் சவுக்கு சங்கரும்

பிரபல யூடியூப்பரான சவுக்கு சங்கர் சமூகவலைதளங்களில் பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் சவுக்கு சங்கர் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் பெண் காவலர்கள் தொடர்பாக சர்ச்சையான கருத்தை தெரிவித்தார். இதனால் தமிழகம் முழுவதும் பெண் காவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் தேனியில் உள்ள ஒரு விடுதியில் வைத்து சவுக்கு கைது செய்யப்பட்டார். அப்போது அவரது அறை மற்றும் காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். 

குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர்

அடுத்தடுத்து சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது கால் தவறி கீழே விழுந்ததில் கையில் காயம் ஏற்பட்டது. ஆனால் போலீசார் தன்னை தாக்கியதால் காயம் ஏற்பட்டதாக சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து பல மாதங்களுக்கு பிறகு குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் சிறையில் இருந்து சவுக்கு சங்கர் வெளியே வந்தார். வெளியே வந்த சவுக்கு சங்கர், சவுக்கு மீடியா என்ற இணையதளம் மூலம் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதில் தமிழக அரசின் செயல்பாடு, அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் தொடர்பாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு வந்தார். 

மீண்டும் சவுக்கு சங்கர் கைது செய்ய போலீஸ் திட்டம்

இந்த நிலையில் தான் இன்று காலை தனது சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட சவுக்கு சங்கர், அதில் மாலதி உள்ளிட்ட எங்களது மொத்த டீமையும் போலீசார் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், தனது வீட்டிற்கு கீழே இரண்டு வேன்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் தான் வீட்டின் கதவை வழக்கறிஞர்கள் வரும் வரை திறக்க மாட்டேன் என கூறியதாக வீடியோவில் பதிவிட்டிருந்தார். இதன் காரணமாக தனது வீட்டிற்கு வெளியே போலீசார் காத்திருப்பதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து அங்கு வந்த சவுக்கு சங்கரின் வழக்கறிஞர்களிடம்  கைது தொடர்பான காரணத்தை போலீசார் தெரிவித்தனர்.

கதவை திறக்காத சவுக்கு சங்கர்- கடப்பாரை மூலம் கதவை உடைக்க திட்டம்

இருந்த போதும் சவுக்கு சங்கர் தனது வீட்டின் கதவை பல மணி நேரங்களாக திறக்காமல் தொடர்ந்து வீட்டிற்குள் இருந்துள்ளார். இதனையடுத்து சவுக்கு சங்கரிடம் பலமுறை கதவை திறக்க போலீசார் அறிவுறுத்தியும் கதவை திறக்கவில்லை.

இந்த நிலையில், போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கடப்பாரையை கொண்டு வீட்டின் கதவை உடைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக தீயணைப்பு துறையினர் கடப்பாரையோடு சவுக்கு சங்கர் வீட்டிற்கு வந்துள்ளனர். இது தொடர்பான வீடியோவையும் சவுக்கு சங்கர் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

வழக்கின் பின்னனி என்ன.?

ரெட் அண்ட் ஃபாலோ என்ற திரைப்படம் தொடர்பாக தனது வீடியோவில்  அவதூறு பரப்பும் வகையில் சவுக்கு சங்கர் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக், கடந்த ஜூன் மாதம் சவுக்கு சங்கர் அலுவலகத்திற்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது அங்கிருந்த சவுக்கு சங்கர், மாலதி மற்றும் ஊழியர்கள் தன்னை மிரட்டி 10 லட்சம் கேட்டதாகவும், தன்னிடம் இருந்த 2 லட்சம் ரூபாயை அபகரித்து கொண்டு தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஆதம்பாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி விளக்கம் கேட்ட நிலையில், இன்று காலை சவுக்கு சங்கர் வீட்டிற்கு அவரை கைது செய்ய சென்றது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Embed widget