Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
ஏதர் நிறுவனத்தின் Ather 450 X இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் இரு சக்கர வாகனத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. குறிப்பாக, மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் முன்னணி இ ஸ்கூட்டர் நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது ஏதர் நிறுவனம்.
ஏதர் இ ஸ்கூட்டர்:
ஏதர் நிறுவனம் பல்வேறு இ ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஏதர் நிறுவனத்தின் முக்கியமான படைப்பு Ather 450X ஆகும். இந்த இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே காணலாம். இந்த இ ஸ்கூட்டர் மொத்தம் 4 வேரியண்ட்கள் உள்ளது.
1. 450X:
ஏதர் 450X இந்த வேரியண்ட் 2.9 கிலோவாட் பேட்டரி கொண்டது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 126 கிலோமீட்டர் மைலேஜ் தரும். அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதை சார்ஜ் செய்வதற்கு 4.3 மணி நேரம் ஆகிறது. இந்த இ ஸ்கூட்டர் வெள்ளை, சாம்பல், நீலம், கருப்பு என மொத்தம் 8 நிறங்களில் உள்ளது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 57 ஆயிரத்து 416 ஆகும்.
2. 450X:
ஏதர் 450X இ ஸ்கூட்டரின் இந்த வேரியண்டின் விலை ரூபாய் 1 லட்சத்து 69 ஆயிரத்து 327. இதன் பேட்டரி 3.7 கிலோவாட் ஆற்றல் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 161 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும். இதை சார்ஜ் செய்வதற்கு 5.45 மணி நேரம் ஆகிறது. இந்த இ ஸ்கூட்டரும் கருப்பு, வெள்ளை, சாம்பல் என மொத்தம் 8 வேரியண்ட்டில் உள்ளது.
3. 450X Ather Stack Pro:
ஏதரின் 450X Ather Stack Pro-வின் விலை ரூபாய் 1 லட்சத்து 70 ஆயிரத்து 416 ஆகும். இது ஒரு முறை சார்ஜ் செய்தால் ரூபாய் 126 கிலோமீட்டர் வரை செல்லும் மைலேஜ் தரும். அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. 2.9 கிலோவாட் பேட்டரியை கொண்டது. 4.3 மணி நேரம் சார்ஜிங் செய்வதற்கு எடுத்துக் கொள்கிறது. கருப்பு, சிவப்பு, வெள்ளை என இந்த இ ஸ்கூட்டர் 8 வண்ணங்களில் உள்ளது.
4. 450X Ather Stack Pro:
450X Ather Stack Pro இ ஸ்கூட்டரில் 3.7 கிலோவாட் பேட்டரியை கொண்டது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 161 கிலோமீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. இதை சார்ஜ் செய்வதற்கு 5.45 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 83 ஆயிரத்து 327 ஆகும்.
இந்த இ ஸ்கூட்டரின் எடை 108 கிலோ ஆகும். காலிபர் ப்ரண்ட் 3 பிஸ்டன் உள்ளது. எடை இலகுவான இந்த இ ஸ்கூட்டரில் சார்ஜர் வசதி உள்ளது. இதில் சிபிஎஸ், டிஸ்க் வசதி உள்ளது. இந்த இ ஸ்கூட்டரின் பேட்டரிக்கு 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோ மீட்டர் வரை வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.
தொடுதிரை டிஸ்ப்ளே உள்ளது. 7 இன்ச் டிஸ்ப்ளே இதில் உள்ளது. மொபைல் ஆஃப் மூலமாக மானிட்டர் செய்யப்படுகிறது. எல்இடி விளக்குகள் இதில் உள்ளது. 22 லிட்டர் டிக்கி வசதி கொண்டது.





















