Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
ஏய்யா எதுக்கு இப்ப கத்துற? ஆள் ஆளுக்கு பேசினிங்க்னா? நான் வண்டி ஏறி போய்டுவேன் என அமைச்சர் கணேசன் பேச்சால் முகம் சுழித்த பொதுமக்கள்!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாவலூர் - நிதிநத்தம் சாலையின் குறுக்கே 7.53 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன்,
தொடர்ந்து, பொதுமக்களிடம் பேச ஆரம்பித்த போது அவரைப் பேச விடாமல் நாவலூர் கிராமத்தில் சிமெண்ட் சாலை, ரேஷன் கடை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர். ஏய்யா எதுக்கு இப்ப கத்துற? ஆள் ஆளுக்கு பேசினிங்க்னா? நான் வண்டி ஏறி போய்டுவேன் என அமைச்சர் கணேசன் ஆவேசமாக பேசி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் கணேசன் பேச்சால் முகம் சுழித்த பொதுமக்கள்.




















