சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை அவரின் வீட்டின் கதவை உடைத்து போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தில் சவுக்கு மீடியா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய குழுவினர் ஒருவரை அடித்து பணம் பறித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த மாதம் அழைப்பாணை கொடுக்கப்பட்டு தற்போது வரை அதற்காக சவுக்கு சங்கம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் சவுக்கு சங்கர் தரப்பில் வெளியிட்டுள்ள வீடியோவில் பதில் கடிதம் அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தற்போது ஆதம்பாக்கம் போலீஸார் மற்றும் உதவி ஆணையர் குழு பல்லாவரத்தில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டிற்கு கைது செய்ய வந்தனர். சவுக்கு சங்கர் வீட்டின் கதவை திறக்காமல் வழக்கறிஞர் வரும் வரை காத்திருக்க காவல்துறையினரிடம் சொல்லியுள்ளார். வழக்கறிஞர் வந்த பிறகும் கதவை திறக்காததால் காவல்துறையினர் தீயணைப்பு துறையினரை வரவழைத்து கதவை உடைத்து கைது செய்ய திட்டம் தீட்டினர்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, காவல் துறையினர் மாற்று வழியைத் தேடி, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் வீட்டின் கதவைப் பூட்டை உடைத்து உள்ளே சென்று சவுக்கு சங்கர் மற்றும் அவரது குழுவினரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பின்னர், வீட்டில் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் உள்ளனவா என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி, அவற்றை கைப்பற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். சவுக்கு சங்கர் தரப்பில் இந்த வழக்கு பொய் வழக்கு என்று நிராகரிக்கப்பட்டாலும், காவல் துறையினர் மேற்கொண்ட திடீர் மற்றும் தீவிரம் நிறைந்த கைது நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.





















