மேலும் அறிய
Rosh Bora : பெங்காலி ஸ்பெஷல் ஸ்வீட் ரோஷ் போரா.. பண்டிகை நாளில் செய்து பாருங்க!
Rosh Bora : அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் நெருங்கி வரும் சமயத்தில், இப்போதே ரோஸ் போராவை செய்து பழகுங்கள்.

ரோஸ் போரா
1/6

தேவையான பொருட்கள் : சர்க்கரை - 1 கப் , தண்ணீர் - 1 1/2 கப், நெய் - 1 தேக்கரண்டி, ரவை - 1/2 கப், காய்ச்சி ஆறவைத்த பால் - 1 1/2 கப், ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி , பேக்கிங் சோடா - 1 சிட்டிகை , பால் பவுடர் - 2 மேசைக்கரண்டி, எண்ணெய்.
2/6

செய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சர்க்கரை சேர்த்து பாகாக காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
3/6

அடுத்தது ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும், அதில் ரவை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும். அதன் பின் காய்ச்சி ஆறவைத்த பாலை சேர்த்து மிதமான தீயில் கிளறிவிடவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
4/6

அடுத்தது ரவை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி ஏலக்காய் தூள், பேக்கிங் சோடா, பால் பவுடர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
5/6

அடுத்தது பிசைந்த மாவை உருண்டை பிடித்து வட்டமாக தட்டிக்கொள்ளவும். அதன் பின் கடாயில் எண்ணெய் உருட்டி சூடானதும் உருட்டிய மாவை பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
6/6

அடுத்தது பொரித்த ரோஸ் போராவை சர்க்கரை பாகில் நிமிடம் ஊறவைத்து எடுத்தால் சுவையான ரோஸ் போரா தயார்
Published at : 05 Sep 2024 12:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion