மேலும் அறிய
Ragi Upma : ரவையில் வேண்டாம்.. ராகியில் உப்மா செய்யுங்க சூப்பரா இருங்க!
Ragi Upma : இந்த சத்தான ராகி உப்மாவை தேங்காய் சட்னி, கார சட்னி, ஊறுகாயுடன் வைத்து சாப்பிட்டால் டேஸ்ட் பிரமாதமாக இருக்கும்.

ராகி உப்மா
1/6

தேவையான பொருட்கள்: ராகி மாவு - 1 கப், தண்ணீர், எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1/2 தேக்கரண்டி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, இஞ்சி, வெங்காயம் - 1 , பச்சை மிளகாய் - 6 , மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, துருவிய தேங்காய்
2/6

செய்முறை: ஒரு பாத்திரத்தில் ராகி மாவை சேர்த்து அதில் சிறுக சிறுக தண்ணீர் ஊற்றி புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். அதன்பிறகு ராகி மாவை இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
3/6

அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, ஒரு நிமிடம் வதக்கவும். அடுத்தது கடுகு, சீரகம், பெருங்காய தூள், கறிவேப்பிலை, இஞ்சி, சேர்த்து வதக்கவும்.
4/6

அடுத்தது நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.அதன்பிறகு மஞ்சள் தூள், உப்பு, சேர்த்து வதக்கவும்.
5/6

அரை மூடி தேங்காய் துருவல் சேர்த்து கிளறிவிட்டு வேக வைத்த ராகி மாவை சேர்க்கவும்.
6/6

அரை மூடி தேங்காய் துருவல் சேர்த்து கிளறிவிட்டு வேக வைத்த ராகி மாவை சேர்க்கவும்.
Published at : 18 Jul 2024 10:41 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஐபிஎல்
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion