மேலும் அறிய

Trump Warns Iran: “எங்கள தாண்டி அவங்கள தொடுங்கடா பார்ப்போம்“; ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குதித்த ட்ரம்ப்

ஈரானில், அமைதியாக போராடுபவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினால், அவர்களை காப்பாற்ற அமெரிக்கா வரும் என்று அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானில், காமேனி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை, அந்நாட்டு அரசு சுட்டுக் கொன்றால், அவர்களை காப்பாற்ற அமெரிக்கா வரும் என்றும், தாக்குதல் நடத்த தயாரான நிலையில் இருப்பதாகவும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அது குறித்து தற்போது பார்க்கலாம்.

ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை என்ன.?

ஈரானில் நடக்கும் போராட்டம் தொடர்பாக, தனது சமூக வலைதள பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “அமைதியான முறையில் போராடுபவர்களை ஈரான் அரசு அவர்களின் வழக்கப்படி சுட்டுக் கொன்றால், அவர்களை மீட்க அமெரிக்கா வரும். நாங்கள் தாக்குதலுக்கு தயாரான நிலையில் இருக்கிறோம்“ என, குறிப்பிட்டுள்ளார்.

போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் அரசு வன்முறையை கையிலெடுத்தால், ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா தயங்காது என்பதையே ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கை காட்டுகிறது.

சரிந்த ஈரானின் பொருளாதாரம்

ஈரானில், ஏற்கனவே பல தசாப்தங்களாக மேற்கத்திய தடைகளால் பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரம், செப்டம்பர் மாத இறுதியில், ஐக்கிய நாடுகள் சபை 10 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்ட நாட்டின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய சர்வதேச தடைகளை மீண்டும் விதித்ததைத் தொடர்ந்து, மேலும் நெருக்கடிக்குள்ளானது.

இதனால், டிசம்பர் மாதத்தில், பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு 52 சதவீதமாக இருந்தது என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. டாலருக்கும், பிற உலக நாணயங்களுக்கும் எதிராக ஈரானிய ரியால் மதிப்பு குறைந்துள்ளது. இதையடுத்து அங்கு போராட்டங்கள் வெடித்தபோது, ​​அமெரிக்க டாலர் சுமார் 1.42 மில்லியன் ரியால்களாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஒரு வருடத்திற்கு முன்பு, 8,20,000 ரியால்களாக இருந்தது.

வெடித்த போராட்டங்கள்

இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி முதல் அங்குள்ள முக்கிய நகரங்களில் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அவர்களுக்கு ஆதரவாக, அந்நாட்டு பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர். போராட்டத்தில் குதித்துள்ள பல்கலைக்கழகங்களில், நாட்டின் மிகவும் மதிப்புமிக்க தெஹ்ரானில் உள்ள 7 பல்கலைக்கழகங்களும் அடங்கும். 

இந்த போராட்டங்களில், அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே, ஈரான் முழுதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. லோரெஸ்தான், கோம் போன்ற பகுதிகளில், பாதுகாப்பு படையினருக்கும், பேராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில், 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மிகப் பெரிய அளவில் வெடித்துள்ள போராட்டங்களை தடுக்க, ஒருசில பகுதிகளில் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப்புக்கு ஈரான் பதிலடி

இந்நிலையில் தான், போராடுபவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குரல் கொடுத்துள்ளார். ஆனால்,  இதற்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான் அதிபர் மசூத், தங்களின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஈரானில் போராட்டங்களை துாண்டி விடுவது, அமெரிக்காவும், இஸ்ரேலும் தான் எனவும், ஈரானின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நலன்கள் மற்றும் அதன் வீரர்களின் நலன்கள் பாதிக்கப்படும் என்றும் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலரும், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகருமான அலி லாரிஜானி கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, தற்போது ஈரான், அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அணுசக்தி திட்டம் தொடர்பாக ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது இந்த விவகாரமும் சேர்ந்துள்ளது. இதனால், ஒருவேளை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

 

தலைப்பு செய்திகள்

Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget