மேலும் அறிய
Chicken Sukka : மழை காலத்திற்கேற்ற கறிவேப்பிலை சிக்கன் சுக்கா ரெசிபி இதோ!
Chicken Sukka Recipe : இந்த சிக்கன் சுக்காவை சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

சிக்கன் சுக்கா
1/6

தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை, சிக்கன் - 1 கிலோ, காய்ந்த மிளகாய் - 7 , மிளகு - 2 தேக்கரண்டி, சோம்பு - 1 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1 1/2 தேக்கரண்டி , தனியா - 2 மேசைக்கரண்டி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 3 , எண்ணெய் - 3 மேசைக்கரண்டி , கடுகு - 1 தேக்கரண்டி , சீரகம் - 1 தேக்கரண்டி , வெங்காயம் - 2 நறுக்கியது , பச்சை மிளகாய் - 4 , தக்காளி - 2 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி, உப்பு - 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
2/6

செய்முறை: அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் இல்லாமல் கறிவேப்பிலையை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
3/6

அதன்பின், கடாயில் தனியா, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து நன்கு ஆறவிட்டு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
4/6

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம் சேர்த்து பொறித்த உடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்தது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்துவிட்டு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
5/6

அதன்பின் உப்பு, மஞ்சள் சேர்த்து கலந்து சிக்கனை சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிடம் வேகவிடவும். அடுத்தது அரைத்த மசாலா பொடியை கலந்து வேக வைக்கவும்.
6/6

சிக்கன் வெந்ததும் அரைத்து வைத்த கறிவேப்பிலை பொடியை சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிடத்திற்கு பிறகு இறக்கவும். சாதத்துடன் பரிமாறினால் சுவையான கருவேப்பில்லை சிக்கன் சுக்கா தயார்.
Published at : 07 Jun 2024 11:33 AM (IST)
Tags :
South Indian Recipesமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion