மேலும் அறிய
Winter diet : இந்த குளிர் காலத்தில் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த 6 அற்புத உணவுகள் போதும்!
Winter diet : குளிர் காலத்தில் பல விதமான நோய்கள் வரும், அதில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள ஒரு சில உணவுகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும்
குளிர்காலம் (மாதிரி புகைப்படம்)
1/6

வைட்டமின் ஏ, ஆண்டி ஆக்ஸிடண்ட் கொண்ட கேரட்டை சாப்பிட்டால் சருமம் பளபளப்பாகும். ஜீரண மண்டலத்திற்கு உதவி புரியும். உடற்பயிற்சி செய்யும் முன்னர் இதை சாப்பிடலாம்
2/6

வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சளி, இருமலை வராமல் தடுக்கலாம். பருவ கால நோய் தொற்றுகளிலிருந்து நம்மை காக்கலாம். முடி உதிரும் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கலாம்.
3/6

ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த முள்ளங்கி சருமத்திற்கு நல்லது. நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க உதவும்
4/6

கடுகு எண்ணெயில் உணவு சமைக்கலாம். இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவலாம். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்து காணப்படும் இது, உணவின் சுவையை அதிகரிக்க உதவும்
5/6

அவகேடோ எனும் வெண்ணெய் பழத்தில் நல்ல கொழுப்புகளும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம். சருமம் வறண்டு போகாமல் இருக்க உதவும்.
6/6

பாதாம், முந்திரி, பிஸ்தா, காய்ந்த திராட்சை ஆகியவற்றை சாப்பிடலாம். இவை உடலை வலுவாக்க உதவும்.
Published at : 09 Dec 2023 12:56 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















