மேலும் அறிய
Vairamuthu : பூங்காற்று திரும்புமா முதல் புது வெள்ளை மழை வரை..வைரமுத்துவின் மனதை மயக்கும் வரிகள்!
உலக கவிதை தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்துவின் சில பாடல் வரிகள் இங்கே..

வைரமுத்து
1/6

மார்ச் 21 ஆம் தேதி, உலக கவிதை தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ் திரை உலகின் புகழ்பெற்ற கவிஞரான கவி பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளுல் சிலவற்றை இங்கு காண்போம்.
2/6

பூங்காற்று திரும்புமா..முதல் மரியாதை படத்தில் வரும் பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வெச்சுப் தாலாட்ட எனக்கொரு தாய் மடி கெடைக்குமா.. என்ற பாடல் வரிகள் கதாநாயகியை பிரிந்து வாடும் கதாநாயகனின் மனதினை தத்ரூபமாக பிரதிபலித்திருக்கும்.
3/6

புது வெள்ளை மழை..ரோஜா படத்தில் இடம்பெற்றிருக்கும் புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது மனம் சூடான இடம் தேடி அலைகின்றது தேன்நிலவுக்கு சென்றிருக்கும் புதுமண தம்பதிகளுக்கு இதை விட சிறந்த பாடல் இன்று வரை எழுதப்படவில்லை என்றே சொல்லலாம்.
4/6

வெள்ளை பூக்கள்..பாம்பே படத்தில் வரும் வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…விடிகவே…என்ற வரிகள் ஒற்றுமையின் கீதமாக விளங்குறது.
5/6

கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் பிறந்த உடலும் நீ.. பிரியும் உயிரும் நீ.. மரணம் ஈன்ற ஜனனம் நீ..என்ற வரிகள் தன் வளர்ப்பு மகளான அமுதா குறித்து தாய் பாடுவதாக அமைந்திருக்கும்.
6/6

வைரமுத்துவின் கவிதை தொகுப்பான நாட்படு தேறலில் இடம்பெற்றுள்ள வாழ்வே சுகம் சுகம் பாடல் வெவ்வேறு வயதினறுக்கு ஏற்படும் இன்பங்கள் குறித்து வைரமுத்து அழகாக விளக்கியிருப்பார்; வரிகள்: கண்ணொருபால் கொஞ்சம் மயங்கினால் இன்னொரு பால்தான் சுகம் சுகம்..கருவுற்ற பெண்ணாள் வயிற்றினைத் கணவன் தடவுதல் சுகம் சுகம்..ஞானம் எழுதிய கோடுபோல் நரையொன்று விழுதல் சுகம் சுகம்..
Published at : 21 Mar 2023 07:14 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement