மேலும் அறிய
HBD Nayanthara : தங்க மனைவியின் மனதை கவரும் வகையில் வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்!
HBD Nayanthara : 18 நவம்பர் தேதியன்று பிறந்தநாள் காணும் நயனுக்கு ரசிகர்களுக்கும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
1/6

காலத்திற்கேற்ற ட்ரெண்டை அடிக்கடி மாற்றிக்கொண்டு 20 ஆண்டுகளாக சினிமா உலகில் கொடி கட்டி பறந்து வருபவர் நயன்தாரா. தொடக்கத்தில் மலையாள படங்களில் நடித்து வந்த இவர், ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முன்னணி நடிகர்களுடன் இணைந்தும், பெண் கதாபத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளிலும் நடித்து வருகிறார்.
2/6

நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது இவருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டில் திரை நட்சத்திரங்கள் சூழ இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது
3/6

இந்த ஜோடிக்கு உயிர் ருத்ரோநீல் என்.சிவன், உலக் தெய்விக் என்.சிவன் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
4/6

வழக்கமாக நயன்தாராவுடன் போட்டோ எடுத்துக்கொண்டு இணையத்தில் பதிவிடும் விக்கி, குழந்தைகள் வந்த பின் குடும்பமாக பல புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.
5/6

தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா மட்டுமல்லாமல் பிசினஸ் உலகிலும் நயன்தாரா வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்று தனது மனைவிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார் விக்கி.
6/6

நவம்பர் 18 ஆம் தேதியன்று பிறந்தநாள் காணும் நயனுக்கு வாழ்த்து கூறும் வகையில், இரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த கேக்கில், “என் உயிர் மற்றும் உலகமே இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என எழுதப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா ஸ்டோரியிலும் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
Published at : 18 Nov 2023 08:41 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஐபிஎல்
ஐபிஎல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion