அமெரிக்காவில் கொள்கை மாற்றங்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான தேவை குறைந்துள்ளது. இந்த காரணங்களால், ஹோண்டா இந்த மாடல்களின் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தொடங்குவது நீண்ட காலத்திற்கு இழப்புகளை ஏற்படுத்தும் என தீர்மானித்துள்ளது.
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஹோண்டாவின் ஜீரோ சீரிஸ் எஸ்யுவி மற்றும் செடான் மாடல்களை உற்பத்தி பணிகளை தொடங்குவதற்கு முன்பாகவே கைவிடுவதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

- ஹோண்டா ஜீரோ சீரிஸ் எஸ்யூவி, செடான் உற்பத்தி திட்டத்தை கைவிட்டது.
- அமெரிக்க கொள்கை மாற்றங்கள், சீன போட்டியால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
- இந்தியாவிற்கான சிறிய ஜீரோ ஆல்ஃபா எஸ்யூவி திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.
- இந்தியாவில் ஹோண்டா தனது வாகனங்களின் போட்டித்தன்மையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
Honda 0 Series: ஹோண்டா ஜீரோ சீரிஸ் எஸ்யுவி மற்றும் செடான் மாடல்கள் கைவிடப்பட்டாலும், இந்திய சந்தைக்கான சிறிய ஜீரோ ஆல்ஃபா எஸ்யுவி பணிகள் தொடர்கிறதாம்.
ஜீரோ சீரிஸ் எஸ்யு, செடானை கைவிட்ட ஹோண்டா
அடுத்த சில மாதங்களில் அமெரிக்காவில் உள்ள ஆலையில் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜீரோ சீரிஸ் எஸ்யுவி மற்றும் செடான் மாடல்களை உற்பத்திக்கு முன்பாகவே கைவிடுவதாக ஹோண்டா அறிவித்துள்ளது. சவாலான நிதி நிலைமைக்கு மத்தியில் தனது உலகளாவிய மின்சார வாகன உத்தியை மாற்றியமைக்க விரும்புவதால், ஜப்பான் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக ஜீரோ எஸ்யுவி நடப்பாண்டில் இந்திய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அந்த முடிவும் கைவிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சிறிய மற்றும் இந்தியாவிலேயே உருவாக்க முடிவு செய்யப்பட்ட ஜீரோ ஆல்பா எஸ்யுவி ஆனது இன்னும் திட்டத்தில் உள்ளதாம்.
ஜீரோ சீரிஸ் எஸ்யு, செடானை கைவிட காரணம் என்ன?
அமெரிக்காவில் செய்யப்பட்டுள்ள கொள்கை மாற்றங்கள் தங்களது வணிகத்திற்கு சாதகமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. முந்தைய நிர்வாகத்தால் மின்சார வாகனங்களை வாங்குவதற்கும், உற்பத்தி செய்வதற்கும் வழங்கப்பட்ட சலுகைகளை ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் திரும்பப் பெற்றது . பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள் மீது விதிக்கப்பட்ட கட்டணக் கொள்கைகளும் லாபத்தை பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக ஹோண்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்சார வாகனங்களுக்கான தேவை கணிசமாகக் குறைந்து வரும் தற்போதைய வணிகச் சூழலில், ஜீரோ சீரிஸ் எஸ்யுவி மற்றும் செடான் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தொடங்குவது நீண்ட காலத்திற்கு மேலும் இழப்புகளை ஏற்படுத்தும் என்று தீர்மானித்துள்ளோம்" என ஹோண்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டாவிற்கு டஃப் கொடுக்கும் சீனா மாடல்கள்
சீன கார் உற்பத்தியாளர்களிடமிருந்து அதிகரித்து வரும் போட்டியும், ஹோண்டாவின் லாபத்தை பாதிக்கும் மற்றொரு காரணியாக உருவெடுத்துள்ளது. சீனாவில் வாடிக்கையாளர்கள் மென்பொருள் அடிப்படையிலான அம்சங்களில் அதிகளவில் ஆர்வம் செலுத்துவதையும், பாரம்பரிய ஹார்ட்வேர் அம்சங்களிலிருந்து விலகிச் செல்வதையும் இது எடுத்துக்காட்டுகிறது. இதன் விளைவாக, சாஃப்ட்வேர் அடிப்படையிலான வாகனங்கள் (SDVகள்) மற்றும் ADAS தொழில்நுட்பங்கள் அடங்கிய பகுதிகளில் மின்சார வாகன உற்பத்தியாளர்கள் முக்கிய போட்டியாளர்களாக உருவெடுத்துள்ளனர். வணிகச் சூழலில் ஏற்படும் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப பதிலளிக்க இயலாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ஹோண்டா ஆட்டோமொபைல் வணிகம் மிகவும் சவாலான வருவாய் சூழ்நிலையில் விழுந்துள்ளது என்று ப்ராண்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டாவிற்கான இந்தியாவின் ப்ளான் என்ன?
இந்தியாவிற்கான புதிய ஜீரோ சீரிஸ் எஸ்யுவி முதன்மையான தொழில்நுட்ப காருக்கான அடையாளமாக இருக்கும் என தகவல்கள் தெரிவித்தன. ஆனால், தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதேநேரம், இந்திய சந்தைக்கான ஜீரோ ஆல்பா எஸ்யூவிக்கான திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என ஹோண்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ப்ராண்டின் 0 சீரிஸ் மின்சார வாகனங்களின் கீழ் அறிவிக்கப்பட்ட ஏழு மாடல்களில் ஒன்றாகும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட உள்ள இந்த காரானது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

இழப்புகளைச் சமாளிக்க, ஹோண்டா தனது வணிகங்களை முக்கிய மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளில் மறுசீரமைக்கும், சந்தை விரிவாக்கத்திற்கு திட்டமிட்டுள்ள இந்தியாவில் போர்ட்ஃபோலியோவையும், போட்டித்தன்மையையும் மேம்படுத்துவோம் என்றும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Frequently Asked Questions
ஹோண்டா ஜீரோ சீரிஸ் எஸ்யுவி மற்றும் செடான் மாடல்கள் ஏன் கைவிடப்பட்டன?
இந்தியாவிற்கான ஹோண்டா ஜீரோ ஆல்ஃபா எஸ்யூவி திட்டம் என்ன ஆனது?
இந்திய சந்தைக்கான சிறிய ஜீரோ ஆல்ஃபா எஸ்யூவி திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. இது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.
சீன கார் உற்பத்தியாளர்கள் ஹோண்டாவிற்கு என்ன சவால் விடுக்கிறார்கள்?
சீன கார் உற்பத்தியாளர்கள் மென்பொருள் அடிப்படையிலான அம்சங்கள் மற்றும் ADAS தொழில்நுட்பங்கள் கொண்ட மின்சார வாகனங்களில் முக்கிய போட்டியாளர்களாக உருவெடுத்துள்ளனர். ஹோண்டாவால் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப பதிலளிக்க இயலவில்லை.
இந்திய சந்தையில் ஹோண்டாவின் எதிர்கால திட்டங்கள் என்ன?
ஹோண்டா தனது வணிகங்களை மறுசீரமைத்து, இந்திய சந்தையில் போர்ட்ஃபோலியோ மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. ஜீரோ ஆல்ஃபா எஸ்யூவி திட்டம் தொடர்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























