மேலும் அறிய
Captain Vijayakanth : கேப்டன் விஜயகாந்தின் அழியா புகழைப் பாடும் சினிமா பாடல்கள்!
Captain Vijayakanth : மறைந்த நடிகர் விஜயகாந்தின் அழியா புகழை போற்றும் பாடல்கள் இதோ..!

கேப்டன் விஜயகாந்த்
1/6

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் புகழை பாடும் திரைப்பாடல்கள் ஏராளம். அவற்றுள் டாப் 5 பாடல்களை இங்கே பார்க்கலாம்.
2/6

சின்ன கவுண்டர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘அந்த வானத்தைப் போல’ பாடலின் “அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே..” என்ற வரிகள் அவரின் பொன்னான குணத்தை விளக்கி இருக்கும்.
3/6

சின்ன கவுண்டர் படத்தில் வரும் ‘கண்ணுப்பட போகுதையா’ பாடலில் வரும் “ முத்தான பரம்பரை தான் குப்பனும் சுப்பனும் அண்ணன் தம்பி தான் எல்லோரும் ஒரு முறை தான் ஏழையும் சாலையும் சரிசமன் தான்..” வரிகள் விஜயகாந்தின் சகோதரத்துவத்தை போற்றி பாடியுள்ளது.
4/6

சிவப்பு மல்லி திரைப்படத்தில் வரும் ‘எரிமலை எப்படி பொறுக்கும்’ பாடலில் இடம் பெற்றிருக்கும் “ஏறு பிடித்தவர் இருணி இளைத்தவர் வேர்வை விதைத்தவர் வெய்யிலில் அறுத்தவர் ரத்த பொட்டு வைத்து கொண்டால் தர்மங்கள் தூங்காது..” வரிகள் அதர்மத்தை எதிர்த்தி போராடும் அவரது போராட்ட குணத்தை பிரதிபலிக்கிறது.
5/6

கேப்டனின் பொன்னான குணத்திற்காக பல ரசிகர்களும் தொண்டர்களும் அவரை போற்றி புகழ்ந்தனர். அதனை எடுத்து கூறும் வரிகளாக பொன் மன செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள பொட்டு வச்ச தங்கக்குடம் பாடலில் வரும் “மனசு எல்லாமே கோயிலையா அதுல நீ தானே சாமியையா” வரிகள் அமைந்துள்ளது.
6/6

தவசி படத்தில் வரும் ‘எழுந்தா மல போல..’ பாடலில் வரும் “சத்தியத்தையும் தர்மத்தையும் காத்திருக்கும் எங்க தர்மதுரை உங்க கண்ணுக்குள்ளே இருக்கோம் கவலையில்லை..” வரிகள் மக்கள் அவர் மேல் வைத்திருந்த மரியாதையையும் பற்றையும் எடுத்து கூறுகிறது.
Published at : 28 Dec 2023 01:45 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement