மேலும் அறிய
Maaveeran: அடுத்தடுத்து அப்டேட் கொடுக்கும் மாவீரன் படக்குழு..கோலகலமாக நடக்கவிருக்கும் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி!
இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வரும் ஜூலை 14ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாவீரன் திரைப்படம் வெளியாக உள்ளது.
மாவீரன்
1/6

மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கியிருக்கும் அடுத்த திரைப்படம் மாவீரன். ப்ரின்ஸ் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் வெளியாக உள்ளது.
2/6

இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா வரும் ஜூலை 2ஆம் தேதி சென்னை, தாம்பரத்தில் உள்ள சாய் கல்லூரியில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது.
3/6

மாவீரன் படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் இரண்டு பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
4/6

இதில் இரண்டாவது பாடலான ‘வண்ணாரப்பேட்டையில’ பாடலை சிவகார்த்திகேயன் - அதிதி சங்கர் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்துள்ளது.
5/6

மேலும் இப்படத்தின் டைட்டில் டீசரும் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 'எதிர்த்து நின்றான்' எனும் கேப்ஷனுடன் சிவகார்த்திகேயன் படங்களுடன் கூடிய காமிக்ஸ் வரைபடங்களும் இந்த டீசரில் காணப்பட்டன.
6/6

இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளது. இந்நிலையில் மாவீரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.
Published at : 27 Jun 2023 02:38 PM (IST)
மேலும் படிக்க





















