Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: விமானி ஓட்டிகளுக்கு கூடுதல் ஓய்வு போன்ற விதிகளை உடைக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் குழப்பத்தை ஏற்படுத்தவிலல்லை என இண்டிகோ நிறுவன தலைவர் விக்ரம் சிங் மேதா விளக்கமளித்துள்ளார்.

Indigo Flights: இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட குழப்பத்திற்கு அந்நிறுவன தலைவர் விக்ரம் சிங் மேதா மன்னிப்பு கோரியுள்ளார்
மன்னிப்பு கோரிய இண்டிகோ தலைவர்:
இந்திய விமான சேவை பிரிவில் முன்னெப்போது இல்லாத அளவில் கடந்த ஒரு வாரத்தில், இண்டிகோ விமான சேவையில் கடும் குழப்பம் ஏற்பட்டது. ஆயிரத்திற்கும் அதிகமான விமானங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட, பல்லாயிரக்கணக்கான மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஒரு வாரத்திற்கு மேலாக நீடித்த இந்த சிக்கல் தொடர்பாக மத்திய அரசின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்நோக்கத்துடன் எந்தவொரு குழப்பத்தையும் நாங்கள் ஏற்படுத்தவில்லை என இண்டிகோ நிறுவன தலைவர் விக்ரம் சிங் மேதா மன்னிப்பு கோரியுள்ளார்.
”விதிகளை கடந்து செல்ல நினைக்கவில்லை:
புதிய விமானி ஓய்வு விதிகளைப் பின்பற்றுவதைத் தவிர்ப்பதற்காக விமான நிறுவனம் இடையூறுகளை வேண்டுமென்றே ஏற்படுத்தியதா என்று DGCA விசாரித்து வருகிறது. இந்நிலையில் விக்ரம் சிங் வெளியிட்டுள்ள 8 நிமிட வீடியோவில் பல முறை மன்னிப்பு கோரி, “இண்டிகோவை சாராத தொழில்நுட்ப வல்லுநர்களும் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றுவார்கள்;.மூல காரணங்களைக் கண்டறிய உதவுவார்கள். இந்த அளவிலான இடையூறு மீண்டும் ஒருபோதும் ஏற்படாதவாறு சரியான நடவடிக்கைகளை உறுதி செய்வார்கள. "கடந்த வாரத்தில் நிறைய விமர்சனங்கள் வந்துள்ளன. சில நியாயமானவை. சில அப்படி இல்லை. நியாயமான விமர்சனம் என்னவென்றால், விமான நிறுவனம் உங்களை ஏமாற்றிவிட்டது. வாடிக்கையாளர்கள், அரசாங்கம், பங்குதாரர்கள், ஊழியர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும். என்ன தவறு நடந்தது என்பதற்கான ஒவ்வொரு அம்சத்தையும் நாங்கள் ஆராய்வோம். அதிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்வோம்.
திட்டமிட்டு செய்தோமா?
இருப்பினும், சில குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை. இண்டிகோ நிறுவனம்தான் இந்த நெருக்கடியை வெண்டுமென்ரே உருவாக்கியது. அரசாங்க விதிகளை நாங்கள் உடைக்க முயற்சித்தோம். பாதுகாப்பில் சமரசம் செய்தோம். இந்தக் கூற்றுக்கள் தவறானவை. இண்டிகோ விமானச் சேவை விதிகள் அமலுக்கு வந்தபோது அவற்றைப் பின்பற்றியுள்ளது. ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில் நாங்கள் புதிய விதிகளின் கீழ் செயல்பட்டோம். அவற்றைத் தவிர்க்க நாங்கள் முயற்சிக்கவில்லை. எங்கள் கறைபடாத பாதுகாப்புப் பதிவைப் பாதிக்கும் எதையும் நாங்கள் செய்யவில்லை. கடந்த வாரத்தின் இடையூறுகள் எந்தவொரு வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல்களாலும் ஏற்படவில்லை.
குழப்பத்திற்கான காரணம் என்ன?
சிறிய தொழில்நுட்பக் கோளாறுகள், குளிர்காலத்தின் தொடக்கத்துடன் தொடர்புடைய அட்டவணை மாற்றங்கள், பாதகமான வானிலை, விமான அமைப்பில் அதிகரித்த நெரிசல், புதுப்பிக்கப்பட்ட பணியாளர்கள் பட்டியல் விதிகளின் கீழ் செயல்படுத்தல் மற்றும் செயல்பாடு உள்ளிட்ட உள் மற்றும் வெளிப்புற நிகழ்வுகளின் கலவையால் இந்த குழப்பம் நடந்தது. இது ஒரு சாக்குப்போக்கு அல்ல, இது வெறுமனே உண்மை. இந்த நிகழ்வுகளின் கலவையானது எங்கள் அமைப்புகளை அவற்றின் வரம்புகளுக்கு அப்பால் தள்ளியது” என விக்ரம் சிங் மேதா விளக்கமளித்துள்ளார்.





















