ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வஞ்சர மீன் வறுவல், சைனீஸ் பொரியல், தம்ஃப்ரூட் அல்வா என அறுசுவை விருந்து வைத்து நிர்வாகிகளை குஷி படுத்தியுள்ளார் ஈபிஎஸ்..
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. மேலும் திமுக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும், கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் செயற்குழு பொதுக்குழ கூட்டத்தில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதனையடுத்து செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்காக ருசியான உணவுகள் சுடச்சுட தயாராகி வருகிறது. அந்த வகையி ஃகாலையில் இட்லி, பொங்கல் முதல் மதியம் மட்டன் பிரியாணி, சிக்கன் 65 வரை உணவுகள் ரெடியாகிவருகிறது. இந்த நிலையில் உணவுப்பட்டியலை தற்போது பார்க்கலாம்.




















