Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
17 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது
பஞ்ச ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோவில் 3500 ஆண்டுகள் பழமையான திருக்கோவிலாகும், இத்திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.29 மதிப்பில் கோவில் ராஜா கோபுரம், 1000 கால் மண்டபம், மூலவர் என அனைத்து பகுதியும் புராணமைப்பு செய்து பூரண கும்ப மகா கும்பாபிஷேகம் இன்று அதிகாலை 5:45 மணிக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது,
68 யாகம் குண்டுகள் அமைத்து 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் மூன்று நாட்களாக யாக சாலையில் நடத்தி வந்த யாகங்கள் அதிகாலை 4:30 மணியளவில் புனித நீர் கலசத்தை ஊர்வலமாக கோபுரங்களுக்கு எடுத்து சென்றனர்.
கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி பின் 6:30 மணியளவில் மூலவர்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது,
தமிழக முழுவதுமிலிருந்து 40க்கும் மேற்பட்ட ஓதுவாமூர்திகள் பக்க இசைக்கருவிகளுடன் திருமுறை பாராயணம் பாடினர்
கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ரிஷி கோபுரத்தில் நுழைவு வாயிலில் கோவில் பெயரை மலர்களால் எழுத்துக்கள் கோர்க்கப்பட்டு பக்தர்களை கவர்ந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது,
பக்தர்கள் கோவில் சன்னதி வழியாக மட்டுமே அனுபதிக்கப்பட்டு வருகின்றனர், மேலும் ராஜா கோபுரத்தில் இருந்து ஆலயத்துக்கு உள்பகுதியில் வரிசையாக வருவதற்கு தடுப்புகளை காவல்துறையினர் அமைந்துள்ளனர்.





















