மேலும் அறிய
Rakul preet Singh : 2 நிமிட காட்சிக்காக தண்ணீருக்குள் 14 மணி நேரம் நடித்த ரகுல் ப்ரீத் சிங்!
தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் பிரபலமான ரகுல் ப்ரீத் சிங் பட ஷூட்டிங் ஒன்றில் நடந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங்
1/6

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது இந்தியன் 2, அயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
2/6

தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் ஐந்து ஹிந்தி படங்கள் உருவாகி வெளியாகின.
3/6

தற்போது ஜூன் 16ஆம் தேதி இவர் நடித்த‘ஐ லவ் யூ’படம் வெளியாகவுள்ளது . த்ரில்லர் படமான இதில் 2 நிமிடம் தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் காட்சிக்காக 14 மணி நேரம் தண்ணீருக்குள் நடித்தாராம்.
4/6

இது குறித்து அவர் ரகுல் பேசியதாவது “தண்ணீருக்குள் மூச்சை அடக்க ஸ்கூபா பயிற்சியாளர் ஐஹான் அடன்வாலா எனக்கு பயிற்சி அளித்தார்.”
5/6

ஒரு மாதமாக தினமும் அதற்கு நான் பயிற்சி மேற்கொண்டேன். நீச்சல் வீரராக இருப்பதன் மூலம் உடல் மற்றும் மனதை பற்றிய ஆழமான புரிதல் ஏற்பட்டது - ரகுல்
6/6

மேலும் கூறிய அவர் “தண்ணீரில் மூழ்கும் காட்சி எடுப்பதற்கு சவாலாக இருந்தது. நான் மதியம் 2 மணி முதல் அதிகாலை வரை நீச்சல் குளத்தில் தண்ணீருக்குள்ளேயே இருந்தேன்.ஒரே குளிராக இருந்தது. ஒவ்வொரு ஷாட் முடிந்த பின்பு என் மேல் வெதுவெதுப்பான நீரை ஊற்றுவார்கள், தண்ணீரில் உள்ள குளோரின் காரணமாக என் கண்கள் எரிந்தன. இருந்தும் சவாலை எதிர்கொண்டு நடித்தேன்”.
Published at : 14 Jun 2023 12:56 PM (IST)
மேலும் படிக்க





















