மேலும் அறிய
Singapore Saloon Trailer : மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ஆர்.ஜே.பாலாஜி..வெளியானது சிங்கப்பூர் சலூனின் ட்ரெய்லர்!
Singapore Saloon Trailer : பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜியின் புதிய திரைப்படமான சிங்கப்பூர் சலூனின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.

சிங்கப்பூர் சலூன் ட்ரெய்லர் காட்சிகள்
1/7

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிங்கப்பூர் சலூன்.
2/7

ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், லால், கிஷன் தாஸ், மீனாட்சி சவுத்ரி, அன் ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
3/7

ஜனவரி 25 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.
4/7

சிறுவயதில் தனது ஊரில் இருந்த சலூன் கடைக்காரரைப் பார்த்து பெரிய ஹேர்ஸ்டைலிஷ்ட் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.
5/7

அவரது கனவை தகர்க்க பல தடைகள் தோன்றவே அதனை ஆர்.ஜே.பாலாஜி எவ்வாறு வெல்கிறார் என்பதே கதை அமைப்பு என்பது போல் தெரிகிறது.
6/7

இந்த படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஜீவா உள்ளிட்டோர் சிறப்பு கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும் தெரிகிறது.
7/7

மொத்தமாக சிங்கப்பூர் சலூன் ட்ரெய்லர் மக்களின் கவனத்தை ஈர்த்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.
Published at : 18 Jan 2024 04:26 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
அரசியல்
Advertisement
Advertisement