மேலும் அறிய
Tamil Music Directors : தமிழ் சினிமாவில் நடிப்பை தொடர்ந்து இசையிலும் தொடரும் வாரிசுகளின் பங்களிப்பு!
தந்தையை போலவே இசையமைப்பாளர்கள் ஆனவர்களின் பட்டியல் இதோ..
தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர்கள்
1/6

சினிமாவில் இசையமைப்பாளர்களின் பங்கு இன்றியமையாதது. ஒரு படத்திற்கு தனது இசை மூலம் ஸ்கோர் செய்பவர்களின் பங்கு இசையமைப்பாளருக்கு அதிகம் உண்டு. அந்த வகையில் தந்தையின் வழியே மகன்களும் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களாக கலக்கி வருகிறார்கள்
2/6

‘அன்னக்கிளி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜா அவரை தொடர்ந்து அவரின் முத்த மகன் கார்த்திக்ராஜா ரஜினிகாந்த் நடித்த ‘பாண்டியன்’ படம் மூலம் அறிமுகமானார். ஆனால் அவரின் தந்தை அளவிற்கு அவரால் தமிழ் சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை.
3/6

இதைதொடர்ந்து இளையராஜவின் இளைய மகனான யுவன் சங்கர் ராஜா சரத்குமார் நடித்த ‘அரவிந்தன்’ மூலம் அறிமுகமானார். இவரின் பாடல்களை இளைஞர்கள் வலிகளை மறக்க உதவும் ட்ரக்ஸ் என்றே சொல்கின்றனர்.
4/6

தேனிசை தென்றல் தேவா கானா பாடல்களுக்கு பெயர் போனவர். சூப்பர் ஸ்டார் என ரஜினிகாந்தின் டைட்டில் கார்டுக்கு பின்னணியில் ஒலிக்கும் இசைக்கு சொந்தக்காரர் தேவாதான். அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா 'டபுள்ஸ்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானர். 80க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
5/6

ஏ. ஆர். ரைஹானா 2004ம் ஆண்டு வெளியான 'மச்சி' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் பல படங்களுக்கு இசையமைப்பாளராக இருந்துள்ளார். அவரின் மகன் ஜி.வி. பிரகாஷ் இளம் வயதிலேயே அபாரமான இசை ஞானத்தை வளர்த்து கொண்டார்.
6/6

தற்போது இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். எந்திரன் படத்தில் 'புதிய மனிதா' பாடலை பாடியவர் கதீஜா ரஹ்மான். இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மின்மினி' படம் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.
Published at : 13 Jun 2023 06:33 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















