ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE Updates: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் தகவல்களை உடனுக்குடன் காணலாம்.
LIVE

Background
ஏபிபி குழுமத்தின் ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சியானது சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நடிகை மாளவிகா மோகனன் உள்பட பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தென்னிந்தியாவின் பங்கு மகத்தானது. கல்வி, தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு என எந்த துறையை எடுத்தாலும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா, தெலங்கானா போன்ற தென் மாநிலங்களின் பங்களிப்பு என்பது பெரும்பகுதியாக உள்ளது. இந்த பாரம்பரியம், பண்பாடு, சமூக நல்லிணக்கத்தை பசைச்சாற்றும் விதமாக நமது ஏபிபி குழுமம் சார்பில் ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில், வணிகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தி, நடிகை மாளவிகா மோகனன், ஸ்டாண்ட் அப் காமெடியன் ஸ்ரதா ஜெயின், தெலங்கானா எம்.எல்.ஏ., கே.டி.ராமாராவ், தெலங்கானா முன்னாள் எம்எல்சி கவிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
உள்ளூரில் தொடங்கி உலகம் முழுவதும் 67 நாடுகளில் பரந்து விரிந்த ஆச்சி மசாலா பொருட்கள்
ஆச்சி மசாலா நிறுவனம் உள்ளூரில் தொடங்கப்பட்டாலும், தற்போது 67 நாடுகளில் பரவியுள்ளதாக தெரிவித்த பத்மாசிங் ஐசக், இத்தனை நாடுகளில் பரவியுள்ள ஒரே இந்திய நிறுவனம் ஆச்சி தான் என தெரிவித்ததோடு, தன்னுடைய நிறுவனத்தை இந்திய சர்வதேச நிறுவனம் என கூறினார்.
“ஆச்சி மசாலாவில் மருத்துவ குணங்களை தக்க வைப்பதால் மக்கள் விரும்பி வாங்குகின்றனர்“
ஆச்சி மசாலா தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களை தக்க வைப்பதற்காக கோல்ட்(Cold) பிராசஸ் கிரைண்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும், அதனால் பொருட்களின் தரம் உறுதி செய்யப்படுவதால், மக்கள் அதிக அளவில் வாங்கி பயன்படுத்துவதாக ஆச்சி நிறுவனர் பத்மாசிங் ஐசக் கூறினார்.





















