மேலும் அறிய

”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக ஆட்சி நடக்கும் நிலையில், சபாநாயகர் பதவிக்காக இரு கட்சி இடையே மோதல் உண்டாகியுள்ளது.

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தலா 101 தொகுதிகளில் பாஜக-வும், ஐக்கிய ஜனதா தளமும் போட்டியிட்ட நிலையில் பாஜக 89 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. 

பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றாலும் கடந்த 2005ம் ஆண்டு முதல் தன்வசம் வைத்திருந்த உள்துறையை நிதிஷ்குமார் பாஜக-விடம் பறிகொடுத்தார். மேலும், அந்த மாநிலத்தின் முக்கிய துறைகளான சட்டம், விவசாயம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் போன்ற பல துறைகள் பாஜக வசம் சென்றது. 

இந்த நிலையில், பீகார் மாநிலத்தின் புதிய சபாநாயகர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய சபாநாயகரை நியமிக்கும் விவகாரத்தில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. பாஜக தங்களது எம்எல்ஏ-வான ப்ரேம்குமாரை சபாநாயகராக நியமிக்க வேண்டும் ஆர்வம் காட்டி வருகிறது. அவர் கயாநகரத்தில் இருந்து 9வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாஜக-வின் மூத்த தலைவர் ஆவார்.

அதேசமயம், முதலமைச்சர் பதவியை தன்வசம் வைத்துள்ள ஐக்கிய ஜனதா தளம் சபாநாயகர் பதவி தங்களுக்கே வேண்டும் என்று விடாப்பிடியாக உள்ளது, அவர்கள் தாமோதர் ராவத்தை சபாநாயகர் வேட்பாளராக தேர்வு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். முதலமைச்சராக நிதிஷ்குமார் இருந்தாலும் அவர் வசம் எந்த மிகப்பெரிய துறைகளும் இல்லை. அமைச்சரவை கண்காணிப்பு, பொது நிர்வாகம் போன்ற துறைகள் மட்டுமே அவர் வசம் உள்ளது. இந்த சூழலில், சபாநாயகர் பதவியையும் பாஜக வசம் கொடுத்தால் அனைத்து அதிகாரங்களும் பாஜக வசம் செல்லும் அபாயம் உள்ளதாக ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கிய தலைவர்கள் அச்சப்படுகின்றனர். 

ஏற்கனவே நிதிஷ்குமார் முக்கிய துறைகளை பாஜக வசம் தாரைவார்த்து விட்டதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவர் மீது சற்று அதிருப்தியில் உள்ளனர். இந்த சூழலில், சபாநாயகர் பதவியையும் பாஜக-விடம் தாரை வார்த்தால் கட்சியில் அவர் மீது மேலும் அதிருப்தி உண்டாகும் சூழல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால், எப்படியேனும் சபாநாயகர் பதவியை தங்கள் வசம் கொண்டு வர வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் ஆர்வம் காட்டி வருகிறது.  சபாநாயகர் பதவியை தங்கள் பக்கம் கொண்டு வருவதன் மூலம் அதிக அதிகாரத்தை பெற இரண்டு கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியல் வெளியீடு - உங்க ஊரிலிருந்து யார்-யார் இருக்காங்கன்னு பாருங்க! 
மயிலாடுதுறை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியல் வெளியீடு - உங்க ஊரிலிருந்து யார்-யார் இருக்காங்கன்னு பாருங்க! 
20 நாட்களாகியும் கிடைக்காத துப்பு! செஞ்சி சிறுமி ஹேமலதா எங்கே? சிபிசிஐடி போலீசார் திணறல்!
20 நாட்களாகியும் கிடைக்காத துப்பு! செஞ்சி சிறுமி ஹேமலதா எங்கே? சிபிசிஐடி போலீசார் திணறல்!
ஏவுகணைகளை பெற அமெரிக்காவுடன் ஒப்பந்தம்! - தீவிரமடையும் போர்: ஆயுதங்களை வாங்கிக்குவிக்கும் உக்ரைன்!
ஏவுகணைகளை பெற அமெரிக்காவுடன் ஒப்பந்தம்! - தீவிரமடையும் போர்: ஆயுதங்களை வாங்கிக்குவிக்கும் உக்ரைன்!
ஃப்ரீ அரிசியை பாலிஷ் பண்ணி வித்தா மக்கள் ஏமாறுவாங்களா? கொந்தளித்த பா.ம.க தலைவர்!
ஃப்ரீ அரிசியை பாலிஷ் பண்ணி வித்தா மக்கள் ஏமாறுவாங்களா? கொந்தளித்த பா.ம.க தலைவர்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
Karthigai Deepam: இதயத்துடன் வரும் கார்த்திக்.. ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த சதி! சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா?
Karthigai Deepam: இதயத்துடன் வரும் கார்த்திக்.. ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த சதி! சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா?
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
Embed widget