மேலும் அறிய

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கோயம்புத்தூர் முதலமைச்சர் ஸ்டாலின் செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்துள்ளார். 

செம்மொழிப் பூங்காவில் தாவரவியல் பூங்கா, சூரியதகடு, சிற்பங்கள், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் செம்மொழி பூங்காவிற்கு எடுத்து வருதல், பூங்கா வளாகத்தில் தரை தள வாகன நிறுத்துமிடம், நிலத்தடி நீர்த்தொட்டி, மழைநீர் வடிகால், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு குழாய்கள் மற்றும் கூடுதல் மேம்பாட்டு பணிகள், தரைத்தள வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மொத்தம் 208.50 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

உலகத்தரம் வாய்ந்த இப்பூங்காவில், செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம், பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், செம்மொழி வனத்தில் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டு உள்ளதோடு, 2000-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் ரோஜா தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்பூங்கா வளாகத்தில் கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளது.

செம்மொழிப் பூங்கா வளாகத்தில், நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மையக் கட்டடம், 500 நபர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், பூங்காவில் பணியாற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு அறை, உணவகம், ஒப்பனை அறை, சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

செம்மொழிப் பூங்கா வளாகத்தில் தரை தள வாகன நிறுத்துமிடத்தில் மொத்தம் 453 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், செம்மொழிப் பூங்கா வளாகத்தினுள் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு வடிகால் அமைப்பு 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

செம்மொழிப் பூங்கா வளாகத்தில் தரைத் தள வாகன நிறுத்துமிடத்தில் மொத்தம் 453 கார்கள். 10 பேருந்துகள் மற்றும் 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்குக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், செம்மொழிப் பூங்கா வளாகத்தினுள் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு வடிகால் அமைப்பு 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

இப்பூங்கா வளாகத்தில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதைகளுடன் சாலை வசதியும் அமைக்கப்பட்டுள்ளதோடு, மகளிர் சுயஉதவி குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக மதி அங்காடியும் நிறுவப்பட்டுள்ளது.

செம்மொழி பூங்கா வளாகத்தினுள், உலகத் தரத்தில் உயர்தர உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், 4,000 சதுர அடி பரப்பளவில் உள்வன மாதிரி காட்சியமைப்பு, குழந்தைகள் விளையாடுவதற்கு 14,000 சதுர அடி பரப்பளவில் விளையாட்டுத்திடல், சிறுவர்களுக்கான உள்விளையாட்டு அறை, மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கு ஏதுவாக பிரத்தியேக விளையாட்டுத்திடல் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வளாகத்தில் உள்ள நுழைவுச்சீட்டு மற்றும் அனுபவ மையக் கட்டடத்தில் பழங்கால தமிழர்கள் உபயோகப்படுத்திய பொருட்களுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம், இளம்வயதினர் படிப்பதற்கு ஏதுவாக படிப்பகம், முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் பயணிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செம்மொழி பூங்கா வளாகத்தில் உள்ள மரங்கள் மற்றும் தாவரங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய பெயர் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, அதில் QR குறியீடுகள் மற்றும் Barcode போன்ற தொழில்நுட்ப வசதிகளும் நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள் வீடியோக்கள்

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
ABP Nadu Top 10, 13 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 13 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் மண்டபத்தில் என்ன நடக்கிறது? விசாரணை கோரும் பக்தர்கள்!
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் மண்டபத்தில் என்ன நடக்கிறது? விசாரணை கோரும் பக்தர்கள்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget