மேலும் அறிய
Thandatti movie short review: எப்படி இருக்கிறது மண்வாசனை நிறைந்த ‘தண்டட்டி’ திரைப்படம்..? குயிக் ரிவ்யூ இதோ..!
இப்படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி நல்ல கிராமியக் கதைக்கான முன்னோட்டத்தை வழங்கி ரசிகர்களை ஈர்த்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியானதா? வாங்க பார்ப்போம்..

தண்டட்டி
1/6

ரோகிணி, பசுபதி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா, தீபா உள்ளிட்டோர் நடித்துள்ள 'தண்டட்டி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா எழுதி, இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார், சாம் சி.எஸ் பின்னணி இசை அமைத்துள்ளார்.
2/6

போலீஸே நுழையக்கூடாது என அடாவடித்தனம் பண்ணும் தேனி பக்க கிராமத்தில் வாழும் தங்கப்பொண்ணு (ரோகிணி), தன் பிள்ளைகள் தொடங்கி ஊரில் உள்ளவர்களுக்கும் நல்லது செய்து, தன் சொத்துக்களை எல்லாம் இழந்து உயிரிழக்கிறார்.
3/6

இச்சூழலில், தங்கப்பொண்ணுவின் காதில் இருக்கும் ‘தண்டட்டி’க்காக (தங்கத்தால் ஆன காதணி) இவரது ஐந்து பிள்ளைகளும் அடித்துக் கொள்கிறார்கள். இதனிடையே பணி ஓய்வு பெறவிருக்கும் சூழலில், தொடர் சிக்கல்களில் மாட்டும் போலீஸ் ஏட்டான (சுப்பிரமணி) பசுபதி, இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். இதன் தொடர்ச்சியாக நடப்பது என்ன? தண்டட்டி யாருக்கு கிடைத்தது?, பசுபதி என்ன செய்கிறார் ஆகிய கேள்விகளுக்கான பதில்களை சிரிப்புடன் கலந்து உணர்வுப்பூர்வமாகக் கொடுத்திருக்கிறார்கள்.
4/6

முதலில் இப்படத்துக்கு பெரும் பலம் படத்தின் நடிகர்கள்.தண்டட்டியை அடையாளமாக அணிந்து, பிள்ளைகள் தொடங்கி அனைவருக்கும் கரிசனம் காட்டும் கிராமத்து தாயாக ரோகிணி,பொறுப்புடன் வலம் வந்து தேவையான நேரத்தில் சீறும் மிடுக்கான ஏட்டு கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதி என இருவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி நம்மை ஈர்க்கிறார்கள்.
5/6

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி தண்டட்டி நம்மை ஈர்க்கிறது. மேற்கண்ட குறைகளைக் களைந்திருந்தால் தண்டட்டி இன்னும் ஜொலித்திருக்கும்! தண்டட்டியை ஒரு மதிய நேரத்தில் ஆற, அமர்ந்து குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்!
6/6

மகேஷ் முத்துசாமியின் கேமரா தேனி பக்க அழகையும், துக்கவீட்டையும் நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளது. சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை சில இடங்களில் நம்மை ஈர்த்தும், சில இடங்களில் மிகையாகவும் ஒலிக்கிறது. எடிடிங்கில் கவனம் செலுத்தியுருக்கலாம்.அதேபோல் படத்தின் பக்கபலமாக அமையும் காமெடி, சில இடங்களில் ஓவர்டோஸாகி நம்மை கதை ஓட்டத்தில் இருந்து விலக வைக்கிறது.
Published at : 24 Jun 2023 01:30 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion