மேலும் அறிய
Maaveeran Movie Review: மாவீரன்’ல சிவகார்த்திகேயன் செத்துருவாரா..? மாஸ் காட்டியதா மாவீரன்..? குட்டி விமர்சனம் இதோ!
Maaveeran Review in Tamil: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாவீரன்’ படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.

மாவீரன்
1/6

மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’ . இந்தப் படத்தில் நடிகை சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியுள்ள ‘மாவீரன்’ படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
2/6

பிரச்சினையில் இருந்து மக்களை காக்க போராடுபவனே உண்மையான மாவீரன் என்பதே இப்படத்தின் அடிப்படை கதையாகும்.
3/6

சென்னையில் காலம் காலமாக வசிக்கும் பூர்வகுடி மக்கள் வளர்ச்சிக்காக நகரில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு "மக்கள் மாளிகை" அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்படுகிறார்கள். ஊழலின் ஊற்றாக, அடுத்த நொடி உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் அந்தக் குடியிருப்பில் தினம் தினம் பிரச்சினைகள். இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் போகாமல் எதையும் அட்ஜஸ்ட் பண்ணி வாழும் தைரியம் இல்லாத சிவகார்த்திகேயன், ஒரு கட்டத்தில் அந்தத் துறை அமைச்சராக வரும் மிஷ்கினுடன் தைரியமாக மோதுகிறார்.
4/6

மக்கள் அவரை மாவீரனாக பார்க்கிறார்கள். எங்கிருந்து சிவகார்த்திகேயன் இவ்வளவு தைரியம் வந்தது? மாவீரனாக அவர் மக்களை காத்தாரா? இல்லை மக்களுக்கான உரிமைப் போரில் தோற்றாரா? என்பதே இப்படத்தின் கதையாகும்.
5/6

முதல் பாதி முழுக்க கலகலப்பான காட்சிகளுடன் பயணிக்கும் கதை, இரண்டாம் பாதியில் சீரியஸாக மாறினாலும் பெரிய தாக்கம் ஏற்படவில்லை என்பதே உண்மை. படத்தில் அசசரீயாக ஒலிக்கும் விஜய் சேதுபதியின் குரல் படத்தை இன்னும் சுவாரசியம் ஆக்குகிறது.
6/6

அதேபோல் பரத் சங்கரின் பின்னணி இசை பல இடங்களில் ரசிக்க வைக்கிறது. லாஜிக் பார்க்காமல் மாவீரன் பார்க்க சென்றால் ஒருமுறை ரசிக்கலாம். மொத்தத்தில் மாவீரன் பெயரில் மட்டும் தான்.. கதையில் இல்லை...!
Published at : 14 Jul 2023 12:55 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தஞ்சாவூர்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion