PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
பிரதமர் மோடி பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல் பண்டிகை. தமிழர்களின் அடையாளமான இந்த பண்டிகை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
பொங்கல் கொண்டாட வரும் பிரதமர் மோடி:
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் பாஜக-வின் ஆட்சியிலும், பாஜக கூட்டணி ஆட்சியிலும் உள்ளது. ஆனால், தமிழ்நாடு பாஜக-விற்கு சிம்ம சொப்பனமாக உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் பாஜக தீவிரமாக முயற்சித்தும் அவர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாஜக ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிக்கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டில் கொண்டாட அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்பாடுகள் தீவிரம்:
தமிழ்நாட்டில் தமிழக மக்களுடன் இணைந்து பிரதமர் மோடி பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் மட்டுமின்றி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பரப்புரையிலும் அவர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.
தேர்தலுக்கு முன்பு வரும் அடுத்தாண்டு பொங்கல் தமிழக அரசியலில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது. வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 3 ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளது. தேர்தலுக்கு முன்பு வழங்கப்படும் இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று திமுக கருதுகிறது.
அனல்பறக்கும் தமிழக அரசியல்:
அதேபோல, பொங்கல் பண்டிகைக்கு பாஜக-வும் மிகப்பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திலே பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையை தீவிரமாக ஏற்பாடு செய்து வருகிறது. பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தால் எங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடுவார்? என்பது குறித்தும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போதே தமிழ்நாடு அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், 2026க்கு பிறகு அனல்பறக்கும். ஆட்சியை மீ்ண்டும் பிடிக்க திமுக கூட்டணி காய்கள் நகர்த்தி வரும் நிலையில், ஆட்சியை கைப்பற்ற அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
ஒரு பக்கம் திமுக கூட்டணி தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், மறுபக்கம் அதிமுக - பாஜக கூட்டணியும் அவர்களுடன் போட்டிபோட்டி தயாராகி வருகின்றனர். இந்த இரு கட்சியினருக்கும் சவால் அளிக்கும் வகையில் மறுபுறம் விஜய்யின் தவெக-வும் தயாராகி வருகின்றனர்.




















