மேலும் அறிய
PS 2 Box Office Collection : வென்றதா சோழ தேசம்..பொன்னியின் செல்வன் குவித்த முதல் நாள் வசூல் எவ்வளவு?
பொன்னியின் செல்வன் 2, இரண்டாம் நாளில் 25 கோடி ரூபாயை வசூல் செய்யும் என்ற எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஸ்டில்
1/6

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்தினத்தின் புதியதொரு காவியம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது.
2/6

முதல் பாகம் செப்டம்பர் மாதம் வெளியான பின் இரண்டாம் பாகம் 9 மாதங்கள் கழித்து ஏப்ரல் மாதத்தின் இறுதியில் வெளியாகியுள்ளது.
3/6

இப்படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்தவர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுக்க, அடுத்தடுத்த காட்சிகளை பார்த்த மக்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.
4/6

இரண்டாம் பாகத்தை விட, முதல் பாகமே பரவாயில்லை என்றும் அதிகமாக வசனம் பேசுகிறார்கள் என்றும் எடிட்டிங் சரியில்லை என்றும் இரண்டு பாடல்கள் மட்டுமே நன்றாக இருக்கிறது என்றும் தெரிவித்தனர்.
5/6

தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாளில் சுமார் 25 கோடியே 45 லட்ச ரூபாயை வசூல் செய்துள்ளது என்ற தகவல் வந்துள்ளது.
6/6

இது இரண்டாம் நாளில் 25 கோடி ரூபாயை வசூல் செய்யும் என்ற எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுவரை, லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் 2வின் முதல் நாள் வசூலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.
Published at : 29 Apr 2023 12:40 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement