மேலும் அறிய
பிரியங்கா சோப்ரா வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள் - நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு!
Priyanka Chopra,Nick Jonas: நிக் ஜோன்ஸ் - பிரியங்கா சோப்ரா மகள் மால்டி உடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் மகள் மால்டி உடன்
1/6

உலகளவில் மிகவும் பிரபலமான ஜோடிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ். இந்த காதல் ஜோடி 2018ம் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும் அவர்கள் இருவரும் 2016ம் ஆண்டு முதல் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. திருமணமாகிய இந்த நான்கு ஆண்டுகளில் இந்த அவர்கள் இருவரிடையே இருக்கும் அன்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.
2/6

O2 Arena -வில் நிக் ஜோனஸ் கான்சர்ட் நடைபெற்றது குறித்து பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 24 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் உலக அழகிப் போட்டியில் பங்கேற்றதாவும் இப்போது அங்கு தன் கணவர் நிக் இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேடையில் அவர்களுடைய மகள் மால்டி மேரி மைக் உடன் பாடுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
Published at : 17 Sep 2024 08:22 PM (IST)
மேலும் படிக்க





















