மேலும் அறிய
Thalaivar 171 : ஜெயிலர் ஃபீவர் குறையும் முன்னரே ரஜினி ரசிகர்களை குதூகலப்படுத்திய சன் பிக்சர்ஸ்!
Thalaivar 171 : த.சே.ஞானவேல் ராஜா இயக்கத்தில் உருவாகவிருக்கும் ரஜினியின் 170வது படத்திற்கு பின்னரே, லோக்கியின் 171 வது படம் தயாராகும் என்பது குறிப்பிடதக்கது.

தலைவர் 171 படக்குழு
1/6

ரஜினி - நெல்சன் - சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவான ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டது. அதை தொடர்ந்து இப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது.
2/6

ஒரு பக்கம் ரஜினியின் ரசிகர்கள் சந்தோஷமாக இருக்க, மற்றொரு பக்கம் விஜய்யின் ரசிகர்கள் லோகேஷ் கனகராஜின் லியோ படத்திற்காக வெயிட்டிங்கில் உள்ளனர்.
3/6

லியோவிற்கு பின்னர் லோகேஷ் யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற கேள்விக்கு, ரஜினியை வைத்துதான் படத்தை உருவாக்குவார் என்ற தகவல் பரவிவந்தது.
4/6

தற்போது இதுகுறித்த் அதிகாரப்பூர்வ தகவலை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இம்முறை, ரஜினி- லோகேஷ் கனகராஜ்-சன் பிக்சர்ஸ் இணைகிறது. பல லைன் அப்களை கொண்ட அனிருத், இந்த படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.
5/6

இப்படம் 2024 ஆம் ஆண்டின் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஆனால், த.சே.ஞானவேல் ராஜா இயக்கத்தில் உருவாகவிருக்கும் ரஜினியின் 170வது படத்திற்கு பின்னரே, லோக்கியின் 171 வது படம் தயாராகும். அதனால் தலைவர் 171 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம்.
6/6

இதற்கு இடையில் லோகேஷ் கனகராஜ், கைதி 2, இரும்பு கை மாயாவி, ரோலக்ஸ், என ஏதேனும் ஒரு படத்தை எடுத்து முடிக்க வாய்ப்புள்ளது.
Published at : 11 Sep 2023 11:36 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion