மேலும் அறிய
Netflix 2024 : 2024ல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வரிசை கட்டும் கோலிவுட் ஸ்டார்ஸ் படங்கள்!
Netflix 2024 : நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் 2024
1/7

இந்த ஆண்டு திரையரங்க ரிலீசுக்கு பிறகான டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் தமிழ் படங்களின் பட்டியலை பார்க்கலாம்
2/7

மஹாராஜா : நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் நடிக்கும் திரைப்படம் மஹாராஜா. இது விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது
3/7

விடாமுயற்சி : லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
4/7

எஸ்.கே. 21 : ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் SK21 திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
5/7

ரிவால்வர் ரீட்டா : பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்களின் தயாரிப்பில், கே. சந்துரு இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்கும் திரைப்படம் 'ரிவால்வர் ரீட்டா'.
6/7

தங்கலான் : ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி திருவோடு உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள 'தங்கலான்' திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.
7/7

இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த் மற்றும் பலர் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
Published at : 18 Jan 2024 02:51 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
அரசியல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion