மேலும் அறிய

K.Bhagyaraj: பாக்யராஜ் அரசியலுக்கு வருவதை தடுத்த எம்ஜிஆர்.. காரணம் என்ன தெரியுமா?

நீ என்னோட ரசிகன்னு தெரிந்தாலும் கூட திமுகவினர் உன் படத்தை குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். அதுதான் உனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய சொத்து என எம்ஜிஆர் கூறினார் என்று பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் என்னை அரசியலுக்கு வர வேண்டாம் என சொன்னார் என இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால் தனது கலையுலக வாரிசு என அழைக்கப்பட்டவர் கே.பாக்யராஜ். இன்றளவும் ரசிகர்களால் அந்த வார்த்தை மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.

எம்ஜிஆரின் கலையுலக வாரிசு

ஒரு நேர்காணலில் பேசிய பாக்யராஜ், “எம்ஜிஆர் என்னை கலையுலக வாரிசு என சொல்வது மிகவும் பாக்கியம். எம்ஜிஆர் என்றால் சினிமா துறையில் மினிமம் கியாரண்டி ராமச்சந்திரன் என்ற பெயர் உண்டு. அதேபோல் என் படங்களிலும் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லாமல் வசூல் பண்ணி கொடுத்தது ஒரு காரணமாக சொல்லலாம். அதேசமயம் எம்ஜிஆர் படங்களில் பெண்களை கவரும் வகையில் ஆபாசம் இல்லாமல் குடும்பங்கள் பார்க்கும் அளவுக்கான காட்சிகளும், நல்ல கருத்துகளும் இருக்கும். அதேபோல் என் படங்கள் மூலம் பெண்களின் ஆதரவு மிகவும் அதிகமாக இருந்தது. 

பெண்களுக்கு மட்டுமே காட்சி என்பது தியேட்டரில் ரொம்ப அரிதாக இருந்தது. ஆனால் என்னுடைய படங்கள் ரிலீசாகும்போது பெண்களுக்கு பிரத்யேக காட்சிகள் போடப்பட்டது. இதனையெல்லாம் எம்ஜிஆர் கவனித்துள்ளார். என்னை விட பாக்யராஜூக்கு பெண்கள் ஆதரவு அதிகம் உள்ளது என தன் நெருக்கமானவர்களிடம் தெரிவித்திருக்கிறார். இது உண்மை என எனக்கு தெரியும் என்று எம்ஜிஆர் கூறியிருக்கிறார். 

அதிமுகவில் சேர வேண்டாம் - எம்ஜிஆர்

அதுமட்டுமல்லாமல் திமுக - அதிமுக பிரிவினை ஏற்பட்டபோது எம்ஜிஆர் மேல் பற்று இருந்தவர்கள் கூட கருணாநிதி மேல் கொண்ட அன்பால் அவரை வெறுக்க ஆரம்பித்தார்கள். அப்படியான சூழல் உருவானது. அந்த நேரத்தில் என்னிடம் எம்ஜிஆர், நீ என்னோட ரசிகன்னு தெரிந்தாலும் கூட திமுகவினர் உன் படத்தை குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். அதுதான் உனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய சொத்து என கூறினார். 

ஒருமுறை தேர்தலில் எம்ஜிஆர் செய்ய வேண்டியது பற்றி நான் சொன்ன கருத்து பேசுபொருளான நிலையில் எம்ஜிஆர், பாக்யராஜ் எம்ஜிஆர் கட்சி தொண்டன் கிடையாது. அவன் ஒரு சினிமா ஆளு. என்னோட ரசிகன் அவ்வளவு தான். அதனால் அவன் சொன்னதை வெளிப்படுத்த வேண்டாம் என மற்றவர்களிடம் கேட்டுக்கொண்டார். பிறகு என்னை அழைத்து, நீ என் ரசிகனாக இருக்கும் வரையில் அவ்வளவு பேரும் உன் படத்தை ரசித்து பார்க்கிறார்கள். அது தொடரும். ஒருவேளை அதிமுக தொண்டன் என  வந்து விட்டால் வீட்டில் இருக்கும் பெண்களை கூட உன் படம் பார்க்கக்கூடாது என சொல்லி விடும் அளவுக்கு தீவிரமாக இருந்து விடுவார்கள். எனவே தப்பித்தவறி கூட அரசியல் பற்றி பேசிவிட வேண்டாம் என சொன்னார் என்று பாக்யராஜ் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget