மேலும் அறிய

Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?

ஜான் ஆரோக்கியசாமியும் ஆதவ் அர்ஜூனாவும் ஒன்று சேர்ந்து ஆனந்தை டார்கெட் செய்வதாகவும், நினைத்த தொகுதியில் கூட போட்டி போட முடியாமல் ஆனந்த் திணறுவதாகவும் பேச்சு அடிபடுகிறது.

தவெக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதா அல்லது தனித்து களமிறங்குகிறதா என்பது இழுபறியில் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் கட்சியின் மூன்று முக்கிய புள்ளிகளாக இருக்கும் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி இடையே மோதல் வலுத்துள்ளதாக சொல்கின்றனர். தவெக உருவாகும் போதே பொதுச்செயலாளர் என்ற முக்கியமான பதவியை ஆனந்திடம் ஒப்படைத்தார் விஜய். களத்திலும் பம்பரமாய் சுழன்ற ஆனந்த் கட்சியில் தனக்கென ஒரு படையையும் உருவாக்கிக் கொண்டார்.

ஆதவ் அர்ஜூனா கட்சிக்குள் எண்ட்ரி கொடுத்ததில் இருந்தே 2 பேருக்கும் இடையே உரசல் இருந்ததாக பேச்சு இருந்தது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது அடுத்த கட்டத்திற்கு சென்று அதிகார மோதல் நடந்து வருவதாக சொல்கின்றனர். ஆதவ் அர்ஜூனாவும் ஜான் ஆரோக்கியசாமியும் ஒன்றுசேர்ந்து ஆனந்தை டார்கெட் செய்வதாகவும், அதனால் அவர் அப்செட்டில் இருப்பதாகவும் பேச்சு இருக்கிறது. 

சர்வே ஒன்றை நடத்தி தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதியாக சோழிங்கநல்லூரை தேர்ந்தெடுத்து வைத்திருந்தார் ஆனந்த். அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக இருந்ததால் அதனை நோக்கி காய்களை நகர்த்தினார் ஆனந்த். ஆனால் அந்த தொகுதிக்கும் வேறு ஒருவரை நிறுத்தலாம் என கள நிலவரத்துடன் கணக்கு காட்டி விஜயை ஆதவ் அர்ஜூனாவும் ஜான் ஆரோக்கியசாமியும் டீல் பண்ணிவிட்டதாக சொல்கின்றனர். அதனால் சோழிங்கநல்லூர் வாய்ப்பையும் இழந்த ஆனந்த் தற்போது தி.நகரை குறிவைத்து வேலை பார்த்து வருகிறாராம். ஆனால் அதற்கும் ஏதாவது சிக்கல் வந்து கைநழுவி போய்விடுமோ என ஆனந்துக்கு பயம் இருப்பதாகவும் பேச்சு இருக்கிறது.

ஏற்கனவே சென்னையில் இருக்கும் தொகுதிகளை குறிவைத்தே ஆதவும், ஆனந்தும் ப்ளான் போட்டு வருகிறார்கள். 2 பேரும் போட்டி போட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். எதிரணியை தாண்டி ஆதவ் ஆனந்திற்கு இடையேயே நீயா நானா போட்டி இருப்பதாக தவெகவினர் மத்தியிலேயே பேச்சு இருக்கிறது. 

ஆதவ் அர்ஜூனாவும், ஜான் ஆரோக்கியசாமியும் விஜய்யிடம் பல்வேறு புகார்களை அடுக்குவதால் விஜய்யும் ஆனந்தை ஓரங்கட்டுவதாக சொல்கின்றனர். குறிப்பாக பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்வியே ஆனந்த் நடத்திய மீட்டிங்கில் தான் ஆரம்பமானது. மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய மீட்டிங்கில் கூட்டணிக்கு போகலாமா என்று ஆனந்த் கேட்ட கேள்வி தான் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு அடித்தளமாக மாறியது. இந்த விஷயத்தை வைத்து ஆதவ் விஜயிடம் பேசியதால், விஜய்யும் ஆனந்த் மீது கடுப்பில் இருப்பதாக சொல்கின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget