மேலும் அறிய

Mahindra BE6 Formula E Edition: அஜித்திற்கு பரிசாக வந்த 23 லட்சம் மதிப்புள்ள Mahindra BE6 Formula E Edition...சிறப்பம்சங்கள் இதோ!

Mahindra BE6 Formula E Edition: அண்மையில் நடிகர் அஜித் குமாருக்கு பரிசாக வழங்கப்பட்ட மகேந்திரா Mahindra BE6 Formula E Edition காரின் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்

மகேந்திரா நிறுவனம் நடிகர் அஜித் குமாருக்கு தங்களது புதிய வெளியீடான Mahindra BE6 Formula E Edition  மின்சார வாகனத்தை பரிசளித்து கெளரவித்தது. இதன்மூலம் அஜித்தின் சொகுசு கார்கள் பட்டியலில் மற்றொரு புதிய வரவு இணைந்துள்ளது. அஜித் பரிசாக பெற்ற இந்த காரின் ஷோ ரூம் விலை ரூ23.69 லட்சமாகும். இந்த காரின் பிற சிறப்பம்சங்களை கீழே பார்க்கலாம் 

நடிகர் அஜித் குமார் கடந்த ஆண்டு முதல் மோட்டர் ஸ்போர்டில் தீவிரமாக பங்கேற்று வருகிறார். கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற  24H சீரிஸில் Porsche 992 GT3 Cup காரில் பங்கேற்று, அஜித்தின் அணி 991 பிரிவில் 3-வது இடத்தைப் பிடித்தது.பெல்ஜியத்தில் நடந்த கிரவுட்ஸ்ட்ரைக் ஸ்பா GT3 சாம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். (Pro-AM) பிரிவில் பங்கேற்று, அவரது அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. ஐரோப்பிய GT3 பந்தையத்தில் சர்வதேச நாடுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்றார். தற்போது ஐக்கிய அமீரக நாடுகளில் நடந்து வரும்  (Le Mans Cup) போட்டிகளில் அஜித் கலந்துகொண்டுள்ளார். 

பல வருடங்களுக்கு பின் மோட்டர் ஸ்போர் விளையாட்டிற்கு திரும்பியுள்ள அஜித்திற்கு ரசிகர்களிடமும் அவரது அணிக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. சந்தையில் புதிதாக வெளியாகும் பல்வேறு கார்களுக்கு அஜித்தை விளம்பரதாரராக சேர்த்துக்கொள்ள அழைப்புகள் வந்தபடி உள்ளன. அந்த வகையில் மகேந்திரா நிறுவனம் அஜித் குமாருக்கு தங்களது புதிய வெளியீடான Mahindra BE6 Formula E Edition  மின்சார வாகனத்தை பரிசளித்து கெளரவித்தது. இதன் வீடியோவை மகேந்திரா நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளது. 

Mahindra BE6 Formula E Edition  சிறப்பம்சங்கள் 

Mahindra BE6 Formula E Edition  என்பது ஃபார்முலா E பந்தயக் கார்களின் (Formula E racing cars) வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டு, ஸ்போர்ட்டிவ் தோற்றத்துடன், மேம்பட்ட ஏரோடைனமிக்ஸ் மற்றும் தனித்துவமான காஸ்மெடிக் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு சிறப்பு எடிஷன் எலக்ட்ரிக் SUV ஆகும். இது 20-இன்ச் அலாய் வீல்கள், பிரத்யேக 'Formula E' பேட்ஜிங் மற்றும் 79kWh பேட்டரி ஆப்ஷனுடன் வருகிறது. இரட்டை 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (dual 12.3-inch displays), 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் (16-speaker Harman Kardon sound system), மற்றும் ஃபார்முலா-E தீம் கொண்ட ஸ்டார்ட்-அப் அனிமேஷன். 6 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, மற்றும் 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள். ஃபைட்டர் ஜெட் போன்ற ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் என இந்த காரில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்தியாவில் இந்த காரின் ஷோ ரூம் விலை ரூ23.69 லட்சமாகும்.

ஏற்கனவே அஜித்திடம் ரூ9 கோடி மதிப்புள்ள  Ferrari SF90, ரூ3.51 கோடி மதிப்புள்ள Porsche 911 GT3 RS, ரூ5 கோடி மதிப்புள்ள  McLaren 750S, மற்றும்  McLaren Senna ஆகிய சொகுசுகார்கள் உள்ளன. தற்போது இந்த பட்டியலில் Mahindra BE6 Formula E Edition இணைந்துள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget