மேலும் அறிய

DMK VCK Alliance : 10 தொகுதி கண்டிப்பா வேணும்.. அடம்பிடிக்கும் திருமா.!! சைலண்ட் மோடில் திமுக- அடுத்தது என்ன.?

Thirumavalavan vs Stalin : தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய திமுக களம் இறங்கியுள்ளது. இந்த நிலையில் 10 தொகுதிகள் வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் பிடிவாதமாக இருப்பதால் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலை நீடித்து வருகிறது.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 36 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது. எனவே கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கியுள்ளது. திமுக கூட்டணியில் இணைந்துள்ள 21 கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் தனித்து பெரும்பான்மை பெரும் வகையில் உதயசூரியன் சின்னத்தை 180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட குறைவான தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைத்த திமுக

இதற்கு ஏற்ப காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த முறை 21 முதல் 23 தொகுதிகள் மட்டும் தர முடியும் என திமுக தலைமை தெரிவித்தது. ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியை முறித்துக்கொள்ள திட்டமிட்டது. இதனையடுத்து நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையால் 28 தொகுதிக்கு காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. அதே நேரம் திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு தொகுதிகளை குறைத்து வழங்கி வருகிறது. மதிமுக, முஸ்லிம் லீக், கொங்கு கட்சிகளுக்கு தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதே போல கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடந்த முறை 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 5 தொகுதி தான் ஒதுக்க முடியும் என தெரிவித்துள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி இன்று பேச்சுவார்த்தை

இதனால் கடந்த இரண்டு வாரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையானது இழுபறியில் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளோடு திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதில் 5 தொகுதிகளுக்கு உடன்பாடு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதே போல திமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ள விடுதலை சிறுத்தைக்கும் கடந்த முறை 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போதும் ஒரு தொகுதியை குறைத்து வழங்க திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை.

 விடுதலை சிறுத்தைகள் எதிர்பார்க்கும் 10 தொகுதிகள்

திமுக தலைமையிடம் 12 தொகுதிகளை கொண்ட பட்டியலை கொடுத்தது. இதன் காரணமாக கடந்த மார்ச் 2ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை சுமார் 15 நாட்களை கடந்தும் நடைபெறவில்லை. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கூறுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகம் முழுவதும் வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே 
10 தொகுதி விடுதலை சிறுத்தைக்கு கட்சிக்கு ஒதுக்க வேண்டும். எனவே விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் வளர்ச்சியை புரிந்து திமுக தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என காத்திருப்பதாக தெரிவித்தனர். 

ஆனால் திமுக தலைமையோ கடந்த முறை ஒதுக்கப்பட்ட 6 தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என இறுதி நிலையில் இருப்பதால் கூட்டணி உடன்பாடு ஏற்படாத நிலை நீடித்து வருகிறது. எனவே இன்றோ நாளையோ விடுதலை சிறுத்தை கட்சியிடம் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி உடன்பாடு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget