மேலும் அறிய

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ

தமிழகம், புதுவை மற்றும் தென்னிந்திய பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களில் விலக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. கேரளா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிகடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

15-01-2026 மற்றும் 16-01-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

17-01-2026 முதல் 19-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

20-01-2026 மற்றும் 21-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதல்:

15-01-2026 முதல் 17-01-2026 வரை: தமிழகம், புதுலை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட் வெப்பநிலையில் மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் சற்று குறைவாக இருக்கக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

15-01-2026 முதல் 17-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (15-01-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (16.01.2020: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை;

15-01-2026 முதல் 19-01-2026 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆசிரியர்கள், அரசு பணியாளர்களாக 9,801 பேருக்கு ஜாக்பாட்.! இன்று அசத்தலான திட்டத்தை அறிவிக்கும் தமிழக அரசு
ஆசிரியர்கள், அரசு பணியாளர்களாக 9,801 பேருக்கு ஜாக்பாட்.! இன்று அசத்தலான திட்டத்தை அறிவிக்கும் தமிழக அரசு
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
"கல்லை வீசினேன்.. தீ வைத்து கொளுத்தினோம்.."ஏன் என்ற காரணத்தை உடைத்த திலகபாமா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர்கள், அரசு பணியாளர்களாக 9,801 பேருக்கு ஜாக்பாட்.! இன்று அசத்தலான திட்டத்தை அறிவிக்கும் தமிழக அரசு
ஆசிரியர்கள், அரசு பணியாளர்களாக 9,801 பேருக்கு ஜாக்பாட்.! இன்று அசத்தலான திட்டத்தை அறிவிக்கும் தமிழக அரசு
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
"கல்லை வீசினேன்.. தீ வைத்து கொளுத்தினோம்.."ஏன் என்ற காரணத்தை உடைத்த திலகபாமா!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
Porur to Vadapalani metro: போரூர் டூ வடபழனி மெட்ரோ ரயில்.! எங்கெல்லாம் நிற்கும்- சென்னை மெட்ரோ முக்கிய அறிவிப்பு
போரூர் டூ வடபழனி மெட்ரோ ரயில்.! எங்கெல்லாம் நிற்கும்- சென்னை மெட்ரோ முக்கிய அறிவிப்பு
காஞ்சிபுரம், வாலாஜாபாத்: பாஜக, அதிமுக-வை கண்டித்து திமுக மாபெரும் போராட்டம்! காரணம் என்ன?
காஞ்சிபுரம், வாலாஜாபாத்: பாஜக, அதிமுக-வை கண்டித்து திமுக மாபெரும் போராட்டம்! காரணம் என்ன?
TN Weather: வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
Embed widget