மேலும் அறிய

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. மாதம்  ரூ. 5000  என்ற மிகக்குறைந்த  ஊதியத்தில் பணியில் சேர்ந்த அவர்களுக்கு  13 ஆண்டுகளாகியும் பணிநிலைப்பு வழங்கப்படவில்லை

பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் அருகில் இன்று போராட்டம் நடத்திய பகுதிநேர சிறப்பாசிரியர்களை காவல்துறையினர் கைது செய்து  தனி இடங்களில் அடைத்து வைத்துள்ளனர்.  உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? திமுகவின் துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது என பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்., 

பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் அருகில் இன்று போராட்டம் நடத்திய பகுதிநேர சிறப்பாசிரியர்களை காவல்துறையினர் கைது செய்து  தனி இடங்களில் அடைத்து வைத்துள்ளனர்.  உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடிய ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கூட கைது செய்து  அடைத்து வைப்பது கண்டிக்கத்தக்கது.

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. மாதம்  ரூ. 5000  என்ற மிகக்குறைந்த  ஊதியத்தில் பணியில் சேர்ந்த அவர்களுக்கு  13 ஆண்டுகளாகியும் பணிநிலைப்பு வழங்கப்படவில்லை. ஆண்டுக்கு சராசரியாக ரூ.576 என்ற அளவில் 13 ஆண்டுகளில்  ரூ.7500 மட்டுமே  ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பணி நிலைப்புக் கோரி பல ஆண்டுகளாக போராடியும் பயன் இல்லாததால் தான் அவர்கள் மீண்டும் போராட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

பகுதி நேர ஆசிரியர்களை அழைத்துப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அவர்களின்  கோரிக்கையை ஏற்று பணி நிலைப்பு வழங்குவதற்கு பதிலாக  ரூ.2500  ஊதிய உயர்வு வழங்குவதாக பேரம் பேசுகிறார். அதை ஏற்க மறுத்து ஆசிரியர்கள் போராட்டம் நட்த்தினால் அவர்களை கைது செய்து  அடைத்து வைக்கிறார்கள். இதன் மூலம் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறைகளையும், துரோகங்களையும் திமுக அரசு கட்டவிழ்த்து விட்டு வருகிறது. இதற்கு மன்னிப்பே கிடையாது.

திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று  திமுக தேர்தல் வாக்குறுதி ( எண் 181) அளித்தது.  அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரையும் பணி நிலைப்பு  செய்ய திமுக அரசு  முன்வர வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

30 நாட்களுக்குள் ரூ.9 ஆயிரம் கொடுத்த திமுக..! தேர்தலில் ஜாக்பாட் அடிக்குமா திராவிட மாடலுக்கு?
30 நாட்களுக்குள் ரூ.9 ஆயிரம் கொடுத்த திமுக..! தேர்தலில் ஜாக்பாட் அடிக்குமா திராவிட மாடலுக்கு?
Anna University Protest: அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கொடும் வெயிலில் தொடர் போராட்டம்; உடல்நலம் பாதிப்பு! அரசுக்கு அழுகுரல் கேட்குமா?
Anna University Protest: அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கொடும் வெயிலில் தொடர் போராட்டம்; உடல்நலம் பாதிப்பு! அரசுக்கு அழுகுரல் கேட்குமா?
Edappadi Palanisamy: மகளிருக்கு ரூ.5000... முதல்வரின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்‌ஷன்?
மகளிருக்கு ரூ.5000... முதல்வரின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்‌ஷன்?
வங்கக் கடலில் சூறாவளி எச்சரிக்கை! தென் மாவட்டங்களில் மழை: வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
வங்கக் கடலில் சூறாவளி எச்சரிக்கை! தென் மாவட்டங்களில் மழை: வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
30 நாட்களுக்குள் ரூ.9 ஆயிரம் கொடுத்த திமுக..! தேர்தலில் ஜாக்பாட் அடிக்குமா திராவிட மாடலுக்கு?
30 நாட்களுக்குள் ரூ.9 ஆயிரம் கொடுத்த திமுக..! தேர்தலில் ஜாக்பாட் அடிக்குமா திராவிட மாடலுக்கு?
Anna University Protest: அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கொடும் வெயிலில் தொடர் போராட்டம்; உடல்நலம் பாதிப்பு! அரசுக்கு அழுகுரல் கேட்குமா?
Anna University Protest: அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கொடும் வெயிலில் தொடர் போராட்டம்; உடல்நலம் பாதிப்பு! அரசுக்கு அழுகுரல் கேட்குமா?
Edappadi Palanisamy: மகளிருக்கு ரூ.5000... முதல்வரின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்‌ஷன்?
மகளிருக்கு ரூ.5000... முதல்வரின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்‌ஷன்?
வங்கக் கடலில் சூறாவளி எச்சரிக்கை! தென் மாவட்டங்களில் மழை: வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
வங்கக் கடலில் சூறாவளி எச்சரிக்கை! தென் மாவட்டங்களில் மழை: வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TVK Meeting Death: மீண்டுமா? விஜய்யின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர் மரணம் - சேலத்தில் நடந்தது என்ன?
TVK Meeting Death: மீண்டுமா? விஜய்யின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர் மரணம் - சேலத்தில் நடந்தது என்ன?
AUS vs ZIM: கங்காருவை கதம் செய்த ஜிம்பாப்வே... டி20 உலகக்கோப்பை 2026-ல் முதல் அப்செட்.. ஆஸி அணிக்கு முதல் தோல்வி
AUS vs ZIM: கங்காருவை கதம் செய்த ஜிம்பாப்வே... டி20 உலகக்கோப்பை 2026-ல் முதல் அப்செட்.. ஆஸி அணிக்கு முதல் தோல்வி
"மாநில அந்தஸ்துக்காகத் தேர்தலைப் புறக்கணிக்கத் தயார்!" - சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி ஆவேசம்!
Tata Punch EV Facelift Testing: டெஸ்ட்டிங் தொடங்கிடுச்சு.! விரைவில் வெளியாகும் டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட்; புதிய அம்சங்கள் என்ன.?
டெஸ்ட்டிங் தொடங்கிடுச்சு.! விரைவில் வெளியாகும் டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட்; புதிய அம்சங்கள் என்ன.?
Embed widget