மேலும் அறிய
G.V Prakash : ‘கேப்டன் மில்லர் படத்தின் இசை இப்படி இருக்கும்..’ ஜிவி பிரகாஷ் கூறியது என்ன?
படக்கதைக்கு ஏற்றவாரு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ், கேப்டன் மில்லர் படத்தில் என்ன செய்துள்ளார் என்பதை விளக்கியுள்ளார்.

கேப்டன் மில்லர் குறித்து பேசிய ஜிவி பிரகாஷ்
1/6

தமிழில் 'சாணி காயிதம்', 'ராக்கி' ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களிடத்தில் கவனம் பெற்ற அருண் மாதேஸ்வரனின் அடுத்த படமாக உருவாகி இருக்கிறது கேப்டன் மில்லர்.
2/6

இதில் நடிகர்கள் தனுஷ், பிரியங்கா அருள்மோகன், கன்னட ஸ்டார் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா, ஜான் கொக்கென் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
3/6

கடந்த சில வாரங்கள் முன்னால் இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் கதைகளம் 1940களில் நடக்கும் அதிகாரத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்களின் புரட்சியை மையப்படுத்தியுள்ளது.
4/6

இப்படத்திற்கு இசையமைத்த ஜி.வி பிரகாஷ் இப்படம் குறித்து நேர்காணலில் பேசுகையில்,“கேப்டன் மில்லர் படத்தின் இயக்கம் மற்றும் இசை ஹாலிவுட் தரத்தில் உருவாகி உள்ளது. இப்படத்தின் மியூசிக் கிட்டதட்ட ஜாங்கோ அன்செயின்ட் படத்தின் இசை போல உருவாகி உள்ளது” என்று கூறினார்.
5/6

“அதுமட்டும்மல்லாமல் நடிகர் தனுஷின் நடிப்பு இப்படத்தில் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது” - ஜி.வி. பிரகாஷ் குமார்
6/6

இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இசையமைப்பாளர் ஜி.வியின் பேச்சு ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
Published at : 23 Aug 2023 01:23 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
விவசாயம்
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement