மேலும் அறிய
Chandramukhi 2 : பரபரப்பாக நடக்கும் சந்திரமுகி 2 டப்பிங் பணிகள்..லாரன்ஸ் புகைப்படத்தை வெளியிட்ட லைகா நிறுவனம்!
லாரன்ஸ் டப்பிங் செய்யும் புகைப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

சந்திரமுகி டப்பிங் பணியில் லாரன்ஸ்
1/6

19 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 2005 ஆம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. இந்த படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தார, பிரபு போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை பி.சிவா இயக்கினார். இது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
2/6

இதனை தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் வாசுவே, நடன இயக்குநரும் மற்றும் நடிகருமான ராகவா லாரன்ஸை வைத்து சந்திரமுகி 2 எடுத்துள்ளார்.
3/6

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இவர் தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
4/6

ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது பெற்ற கீரவாணி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்
5/6

தற்போது சந்திரமுகி 2 படத்தின் டப்பிங் தொடங்கியுள்ளது. லாரன்ஸ் டப்பிங் செய்யும் புகைப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
6/6

இந்த படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Published at : 04 Jul 2023 01:47 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
வேலைவாய்ப்பு
இந்தியா
Advertisement
Advertisement