மேலும் அறிய
Vanitha Vijayakumar : “பிக் பாஸில் நாடகம் தான் நடக்குது..” கொதித்தெழுந்த வனிதா விஜயகுமார்!
Vanitha Vijayakumar : பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து வனிதா விஜயகுமார் பதிவிட்ட எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

வனிதா விஜயகுமார், ஜோவிகா
1/6

நட்சத்திர தம்பதியான விஜயகுமார் - மஞ்சுளாவின் மகள் நடிகை வனிதா விஜயகுமார். சில படங்களில் நடித்த இவர் பிக் பாஸ் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.
2/6

இவருக்கு ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். இவரது மூத்த மகள் ஜோவிகா, தற்போது ஒளிப்பாகும் பிக் பாஸ் சீசன் 7இல் கலந்து கொண்டார்.
3/6

ஆரம்பம் முதலே பல சர்ச்சைகளில் சிக்கிய ஜோவிகா, பிரபலமும் அடைந்தார்.
4/6

வனிதா, சமூக வலைதளங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வந்தார். கடந்த வாரம் ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.அதனையடுத்து வனிதா, சமூக வலைதளங்களில் பிக் பாஸில் பங்கேற்ற வலிமையான போட்டியாளர்களை வெளியே அனுப்பிவிட்டதாகவும் பிக் பாஸை தடை செய்ய வேண்டும் எனவும் பதிவிட்டிருந்தார்.
5/6

அதனைத் தொடர்ந்து, “ நல்வாய்ப்பாக ஜோவிகா வெளியேறிவிட்டார், இனி பிக் பாஸ் பார்க்க போவதில்லை, அதுகுறித்து இணையத்தில் பதிவிட போவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
6/6

இறுதியாக, பிக் பாஸ் 24/7 முழுவதும் நாடகம் எனவும் இனி எபிசோட்களை மட்டும் பார்த்து ரிவ்யூ செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார், மேலும் தான் எக்ஸ் தளத்தில் எந்த பதிவும் பகிர போவதில்லை என பதிவிட்டுள்ளார். முன்னதாக தான் பிக் பாஸ் குறித்து பதிவிட்டிருந்த ட்வீட்டுகளை வனிதா நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 07 Dec 2023 04:08 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion