மேலும் அறிய
Bigg Boss 7 Tamil : விசித்திரா, அர்ச்சனாவை ஓவர் டேக் செய்த கேப்டன் தினேஷ்!
Bigg Boss 7 Tamil : பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் நாளுக்கு நாள் கூடிவருகிறது.
பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர் தினேஷ்
1/6

இதனை பார்த்து வரும் மக்கள், “நாளுக்கு நாள் தினேஷ் மீது இருக்கும் மரியாதை ஏறிக்கொண்டு போகிறது”, “சிறந்த கேப்டன் தினேஷ்”, “விசித்திரா, அர்ச்சனா இருவரையும் நன்றாக கையாள்கிறார்” போன்ற கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
2/6

“ஐஷுவும் நானும் பேசியது தப்பு என்றால், மணியும் ரவினாவும் பேசுவதும் பூர்ணிமாவும் விஷ்ணுவும் பேசுவதும் தப்புதான் என பேசிய நிக்சனுக்கு தரமான பதிலடிகளை கொடுத்தார் அர்ச்சனா. இந்த வாதம் தொடர்பாக பல மொக்கைகளை வாங்கிய நிக்சனின் அன்சீன் வீடியோ எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது
3/6

சரியாக விளையாடாத இரு நபர்களை பிக்பாஸ் நாமினேட் செய்ய கேட்ட போது, பலரும் விசித்திரா, அர்ச்சனா பெயரை கூறி நாமினேட் செய்து ஜெயிலுக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்தனர்.
4/6

இந்த நாமினேஷனை ஏற்க மறுத்த இருவரும் ஜெயிலுக்குள் செல்ல மாட்டோம் என புறக்கணித்தனர். இதனால், இரு பிக்பாஸ் வீட்டிலும் இவர்கள் நுழைய கூடாது என இந்த வாரத்தின் கேப்டன் தினேஷ் கூறிவிட்டார்.
5/6

அர்ச்சனா, விசித்திராவின் கேமை ஓவர் டேக் செய்யும் வகையில், அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து அவர்களுடனே வெளியே படுத்து தூங்கிவிட்டார் தினேஷ்.
6/6

கடந்த வார இறுதியில் பல குழப்பங்கள் நிலவி வந்தால் பெரும் பஞ்சாயத்து நடந்தது. இந்த வாரத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்
Published at : 18 Nov 2023 09:16 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















