மேலும் அறிய
Demonte Colony 2 Update : இருளை நோக்கிய பயணத்தில் அழைத்து செல்ல காத்திருக்கும் டிமாண்டி காலனி 2.. அப்டேட்டிற்க்காக காத்திருக்கிம் ரசிகர்கள்!
Demonte Colony 2 Update : அருள்நிதி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் டிமாண்டி காலனி. இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான அப்டேட் இன்று மாலை வெளியாகிறது.
டிமாண்டி காலனி 2
1/6

கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுக இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் டிமாண்டி காலனி.
2/6

இந்த படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்திருந்தார்.இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது.
3/6

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.
4/6

டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், மீனாக்ஷி கோவிந்தராஜன் ஆகியோர் நடிக்கின்றனர்.
5/6

தற்போது இப்படம் குறித்தான வீடியோ காட்சி ஒன்றை படக்குழு இன்று மாலை 5 மணியளவில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
6/6

இந்த அறிவிப்பு வந்ததில் இருந்து டிமாண்டி காலனி படத்தின் ரசிகர்கள் டிவிட்டரில் டிமான்டி காலனி 2 என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Published at : 07 Jul 2023 01:05 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















