ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினிகாந்துடன் நடிக்க விருப்பப்பட்ட விஜய் அவரது சூப்பர்ஹிட் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டதாக அவரே ஒருமுறை கூறியுள்ளார்.

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜய் தற்போது தமிழக முதல்வராக பதவி வகித்து வருகிறார். சினிமாவில் ரஜினிக்குப் அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் என்கிற வாதம் எப்போதும் இருந்து வந்துள்ளது. ஆனால் விஜய் தனது ஆரம்ப காலகட்டத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். அதிலும், ரஜினி நடித்த ஒரு முக்கியமான படத்தில் தனக்கு ஒரு சிறிய வாய்ப்பு தருமாறு அவரே கேட்டது பலர் அறியாத தகவல்.
ரஜினி படத்தில் வாய்ப்பு கேட்ட விஜய்
விஜய் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் ரஜினிகாந்தின் நடிப்பை ரசித்ததுடன், அவருடன் ஒரே படத்தில் தோன்ற வேண்டும் என்ற விருப்பத்தையும் கொண்டிருந்தார். இதுதொடர்பாக அவரிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, அந்த வாய்ப்பை யாரும் தன்னிடம் வந்து கேட்கவில்லை என்றும், தானாகவே அந்த வாய்ப்பை கேட்டதாகவும் விஜய் கூறியிருந்தார். ரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு சின்ன வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எந்த படம் ?
விஜய் வாய்ப்பு கேட்ட அந்த படம் வேறு எதுவுமல்ல, ரஜினிகாந்தின் சூப்பர்ஹிட் திரைப்படமான படையப்பா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, நாசர், அப்பாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரஜினிகாந்த் தயாரிப்பிலும் பங்காற்றிய இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் தமிழ் சினிமாவில் பேசப்படும் முக்கியமான வில்லி கதாபாத்திரங்களில் ஒன்றாக உள்ளது.
அபாஸ் கதாபாத்திரத்தில் விஜய்
விஜய் கூறிய தகவலின்படி, படையப்பாவில் நடிக்க அவரை படக்குழு நேரடியாக அணுகவில்லை. ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தின் காரணமாக அவரே வாய்ப்பு கேட்டிருக்கிறார். அப்போது விஜய் ஏற்கனவே தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இளம் நடிகராக இருந்தார். அவரது நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றிருந்த காலகட்டமும் அதுதான். அந்த சூழலில் ரஜினியுடன் ஒரே படத்தில் தோன்றும் வாய்ப்பு கிடைத்திருந்தால் அது ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமான கூட்டணியாக அமைந்திருக்கும்.
படையப்பாவில் அப்பாஸ் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க முயன்றிருக்கலாம் என்ற கருத்தும் பின்னர் வெளியானது. படத்தில் அப்பாஸ், நாசர் கதாபாத்திரத்தின் மகனாகவும் சௌந்தர்யாவின் கதாபாத்திரத்துடன் தொடர்புடைய முக்கியமான பாத்திரமாகவும் நடித்திருந்தார். இருப்பினும் விஜய் அந்த படத்தில் இடம்பெறவில்லை. அதனால் ரஜினி மற்றும் விஜய் ஒரே திரையில் தோன்றும் வாய்ப்பு அப்போது உருவாகாமல் போனது.
சினிமா டூ அரசியல்
படையப்பா வெளியான பிறகு விஜய்யின் திரைப்பயணம் வேகமாக முன்னேறியது. ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்காதபோதிலும், அவருடைய சொந்த படங்கள் மூலம் விஜய் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கினார். இன்று விஜய் திரைத்துறையை கடந்து அரசியல் களத்திலும் முதலமைச்சராகி தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலும் இடம்பெற்றுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















