மேலும் அறிய
Vidaamuyarchi: இந்த 5 காரணங்களுக்காக அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தை ரசிகர்கள் கண்டிப்பாக திரையரங்கில் பார்க்கவேண்டும்!
அஜித் நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு பின்னர் வெளியாகியுள்ள 'விடாமுயற்சி' திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டியதன் ஐந்து முக்கிய காரணங்கள் பற்றி பார்க்கலாம்.
விடாமுயற்சி பார்க்க வேண்டியதன் 5 காரணங்கள்
1/5

தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும், முடிந்தவரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நினைப்பவர் தான் நடிகர் அஜித். உடலில் பல வலிகள் மற்றும் வேதனைகள் இருந்தாலும், அதனை தாங்கி கொண்டு, அடுத்தடுத்த முயற்சியை விடாமுயற்சியோடு எடுத்து வைக்கும் அஜித், இந்த படத்தில் எந்த ஒரு டூப்பும் இல்லாமல் ஸ்டண்ட் காட்சியில் நடித்துள்ளார். அதே போல் உடல் எடையை குறைத்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அஜித் இந்த படத்திற்காக போட்டுள்ள உழைப்புக்காக கண்டிப்பாக ரசிகர்கள் திரையரங்கில் இந்த படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும்.
2/5

இளம் இசையமைப்பாளரான அனிருத் இசைக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மேலும் 'விடாமுயற்சி' படத்தின் இசை மற்றும் BGM இதற்க்கு முன்பு இவர் இசையமைத்த படங்களை விட, பல மடங்கு வித்தியாசமா உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். எனவே அனிருத்தின் இசையை திரையரங்கில் அமர்ந்து... துல்லியமான ம்யூசிக் எபெக்ட்டுன் கேட்டபடி ரசிகர்கள் பார்ப்பது அவர்களுக்கு முழுமையான நிறைவு கொடுக்கும்.
3/5

'தடம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம், தன்னை ஒரு சிறந்த இயக்குனர் என நிரூபித்த மகிழ் திருமேனி அஜித் போன்ற ஒரு உச்ச நடிகரை வைத்து இயக்கினால் அந்த படம் எப்படி பட்ட படமாக இருக்கும் என்பது, இந்த படம் பூஜை போட்ட நாளில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எனவே மகிழ் திருமேனியின் மேக்கிங் திறமையை ரசிகர்கள் தெரிந்து கொள்ள இந்த படத்தை கண்டிப்பாக திரையரங்கில் பார்க்கலாம்.
4/5

அஜித் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'விடாமுயற்சி' திரைப்படம், ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் ரீமேக் என்பதை இன்று காலையில் இருந்து வெளியாகும் விமர்சனங்கள் உறுதியாக்கியுள்ள நிலையில், இந்த ஹாலிவுட் படத்தை... மகிழ் திருமேனி எப்படி தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற கதைக்களத்தில் எடுத்துள்ளார், ஹாலிவுட் தரம் இந்த கோலிவுட் படத்தில் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும்.
5/5

விடாமுயற்சி திரைப்படம் வெளியீட்டை எப்படி ரசிகர்கள் எதிர்பார்த்து கார்த்திருந்தார்களோ, அதே அளவிலான எதிர்பார்ப்பு இந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கும் இருப்பதாக அவர்களே கூறி வந்தனர். கிட்ட தட்ட இரண்டு வருட உழைப்பு மற்றும் காத்திருப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள விடாமுயற்சியின் தரத்தை திரையரங்கிற்கு சென்று பார்ப்பதே ரசிகர்களின் சிறந்த சாய்சாக இருக்கும்.
Published at : 06 Feb 2025 08:37 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















